ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம் » Sri Lanka Muslim

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம்

facebook

Contributors
author image

Editorial Team

உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தும் சேவைகளாக இருக்கும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்க ஒரு நாடு திட்டமிட்டுள்ளது.

உகாண்டா நாட்டு வருமானத்தை அதிகரிக்கவும், போலி செய்திகளை ஒழிக்கவும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் மற்றும் ட்விட்டர் போன்ற குறுந்தகவல் செயலி மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக இருக்கும் புதிய வரிச் சட்டம், குறிப்பிட்ட செயலிகள் அல்லது சேவைகளை பயன்படுத்துவோர் தினமும் 200 ஷில்லிங் வரி செலுத்த வேண்டும் என பிபிசி வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத வாக்கில் அந்நாட்டு குடியரசு தலைவர் யோவெரி முஸ்வேனி சமூக வலைத்தளங்கள் போலி செய்திகள் மற்றும் கிசுகிசுக்களை ஊக்குவிப்பதாக தெரிவித்திருந்தார்.

உகான்டா பாராளுமன்றத்தில் புதிய சட்டத்திற்கான ஒப்பதல் வழங்கப்பட்டதும், சட்ட குறிப்பில் கையொப்பமிடுவதாக முஸ்வேனி தெரிவித்துள்ளார். இதை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்து இருக்கிறார்.

“அன்புமிக்க உகான்டா, சமூக வலைத்தள சட்டம் என் மேஜைக்கு வந்தால், கையெழுத்திட தயங்க மாட்டேன். சமூக வலைத்தள மசோதா ஒவ்வொரு உகான்டா குடிமகனும் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த தினசரி அடிப்படையில் வரி செலுத்தக் கோரும்,” என முஸ்வேனி ட்விட் மூலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற செய்தி தொடர்பாளர் க்ரிஸ் ஒபோர், இந்த சட்ட மசோதா ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். உகான்டா மக்கள் அதிகளவு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது நாட்டின் வருவாய்க்கு இந்த மசோதா முக்கிய பங்களிக்கும் என தெரிவித்துள்ளார்.

அரசு அவசர வரிச்சட்டத்தை அதிகம் நம்பியிருக்கவில்லை. இது மறுவிநியோக வரி என்பதால் நிதி திட்டங்களுக்கான தொகையை மட்டுமே அரசு எதிர்பார்க்கிறது. என ஒபோர் தெரிவித்தார். தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் வரி மிகவும் குறுகிய தொகை என்பதால் மக்களுக்கு இது அதிக சிரமமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka