அகில இலங்கை சமாதான நீதிவானாக முகம்மது அப்துர் ரஹீம் நியமனம் » Sri Lanka Muslim

அகில இலங்கை சமாதான நீதிவானாக முகம்மது அப்துர் ரஹீம் நியமனம்

முகம்மது இப்றாஹிம் முகம்மது அப்துர் ரஹீம்

Contributors
author image

M.S.M.ஸாகிர்

சாய்ந்தமருது 01ஆம் பிரிவின் முன்னாள் விவாகப் பதிவாளரான  முகம்மது இப்றாஹிம் முகம்மது அப்துர் ரஹீம் அண்மையில்அகில இலங்கை சமாதான நீதிவானாக கல்முனை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர், தனது ஆரம்பக் கல்வியை அல் – ஜலால் வித்தியாலயத்தில் பயின்று, உயர் கல்வியை கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரியிலும் கற்றவர்.

தற்போது சாய்ந்தமருதின் பிறப்பு – இறப்பு பதிவாளராகவும், சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளிவாசல் பேஷ் இமாமாகவும், சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் போஷகராகவும், வயோதிபர் அமைப்பின் 9ஆம் பிரிவின் தலைவராகவும், சமூகசேவையாளராகவும் இருந்து வருகிறார்.

இவர், சாய்ந்தமருது முகம்மது இப்றாஹிம் சபுறா உம்மா தம்பதிகளின் மூத்த புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka