அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம். » Sri Lanka Muslim

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்.

acju

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அ.இ.ஜ.உ வின் மாத்தளை நகர் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் மாத்தளை GONGAWELA ஜும்மா மஸ்ஜிதில் அஷ்ஷேக் இர்ஸான் முப்தி அவர்களின் தலைமையில் 22.04.2018 காலை 07:30 முதல் 01:00 மணிவரை இடம்பெற்றது.

அக்கூட்டம் இரு அமர்வுகளாக இடம்பெற்றது.
முதல் அமர்வில் அ.இ.ஜ.உ மாத்தளை நகர் கிளை உலமாக்களுக்கான பொதுக்கூட்டமும் இரண்டாம் அமர்வில் மாத்தளை மாவட்ட துறைசார்ந்தவர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில் அ.இ.ஜ.உ வின் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி (பின்னூரி) அவர்கள் சகவாழ்வு எனும் தலைப்பிலும்

அ.இ.ஜ.உ வின் உப செயளாலர் அஷ்ஷேக் முர்ஷித் முளப்பர் (ஹுமைதி) அவர்கள் தற்கால பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

அ.இ.ஜ.உ வின் பிரச்சாரக்குழு செயளாலர் அஷ்ஷேக் உமர்தீன் (ரஹ்மானி) அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வின் இறுதியில் அ.இ.ஜ.உ வின் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி அவர்கள் மாத்தளை மாவட்ட உலமாக்களோடு ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: மாத்தளை நகர் கிளை ஊடகப்பிரிவு.

Web Design by The Design Lanka