அகில இலங்கை மக்கள் காங்கிரக்கு பலப்பரீட்சையா? » Sri Lanka Muslim

அகில இலங்கை மக்கள் காங்கிரக்கு பலப்பரீட்சையா?

rishad

Contributors
author image

Irshad Rahumadullah

    ( எழுதுவது – தேசமான்ய அல்ஹாஜ்.இர்ஷாத் றஹ்மத்துல்லா)


இந்த நாட்டு அரசியல் தீர்க்கமான பலத்தை நிருபிக்கும் தேர்தலாக இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அடையாளப்படுத்துவது பொருத்தமாகும்.ஜனாதிபதியினை தெரிவு செய்யும் தேர்தல்,பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல்களுக்கெல்லாம் தளம் போட்டாற் போல் அமைவது இந்த  குட்டித் தேர்தல் ஆகும்.தேர்தல் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே கட்சிகளும்,அதோடு சார்ந்த வேட்பாளர்களும் களத்தில் குதிப்பது தொடர்பில் ஊடகங்கள் மூலமும் ஏனைய இலத்திரணியல் புத்தகங்கள் மூலமும் கருத்துக்களை வெளியிட்டுவந்த நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இரு கட்டமாக கோறுவதற்கு தேர்தல் ஆணகை்குழுவிற்கு நிலை ஏற்பட்டது.

அதன் பிற்பாடு எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம்   திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்லுக்கான தினம் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் கட்சிகள் பலகளத்தில் இறங்கியிருக்கின்ற போதும்,பெரும்பான்மையாக முஸ்லிம்கள வாழும் பகுதிகளில் காணப்படும் அரசியல் அலையானது அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவைராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு இருக்கின்றதற்கு போதுமான கனிப்பீட்டு தரவுகள் சான்று பகிர்கின்றன.

அம்பாறை மாவட்டம்………….

இந்த நாட்டு அரசில் வரலாற்றில் ஏனைய மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக் கூடிய பலம் இங்கு இருக்கின்றது.அது தேர்தலாக இருந்தாலும் சரி,சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அனுகுகின்ற போதும் அதற்கான களத்தை காணமுடிகின்றது.இந்த களமானது இன்று நேற்று தோன்றியது அல்ல.அது மறைந்த  தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் ஆளுமையினால் கொண்டுவரப்பட்ட ஒன்று என்பதை எவரும் மறைத்து பேசமுடியாது.அந்த பேச்சுக்கள் என்பது உணர்வு பூர்வமானது என்பதை நாம் துணிந்து கூற முடியும்.

ஆனால் அதன் பிற்பாடு கட்சிகளின் தலைவர்களாக வந்தவர்கள் அவர்களது சொந்த கருத்துக்களை முன் வைத்து அரசியல் செய்ததினால் கட்சியினால் உருவாக்கப்பட்ட பல தியாகிகளை கட்சி இழக்க நேரிட்டது.இந்த இழப்பு என்பது சரித்திரத்தில் மீண்டும் சரி செய்ய முடியாதொன்று என்பதை தற்போதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  உணர்ந்துள்ளது.

கிழக்கில் முஸ்லிம்களை உரிமைகள் பெரும்பான்மை கட்சி சார்ந்த அரசியல் வாதிகளினால் திட்டமிடப்பட்டு கபளீகரம் செய்யப்படுகின்ற போதெல்லாம்,அவர்களுடன்  இணைந்த கட்சிகள் மௌனித்து அதனை வேறு கட்சிகளின்  சதியென புரம் பேசி லாபம் அடைந்த வரலாறை நாம் மறக்க முடியாது.சிலை வைப்பு,முஸ்லம்களின் காணிகள் அபகரிப்பு,உள்ளிட்ட இன்னும் எத்தனை விடயங்கள் வந்த போதும்,ஒட்டு மொத்தத முஸ்லிம்களின் கட்சியென கூறியவர்கள் முகுடிக்கு ஆயடி நாகத்தை போன்று பெட்டிப்பாம்பாகஅடங்கி போனர்களே ஒழிய அதற்கு எதிராக எடுத்த நடவடிக்கையென்பது கடுகைவிடவும் சிறிதாகவே இருந்தது என விபரிக்க முடியும்.

அரசியல் இயக்கம் என்பது மக்களுக்கு பணிபுரியும் அமைப்பொன்றே தவிர அதனை கட்டிப்பிடித்து நிரந்தர சொத்தாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு மலிவான மன நிலைக்குள்ளானவர்களைின் செயற்பாடுகள் எந்த பிரச்சினையைினையும் தட்டிக்கேட்க முடியாது போனது அவர்களுக்கு,இந்த நிலையில தான் பாரிய விருட்சமாக மாற வேண்டியகட்சி பண்டிகை காலத்தில்  ஊர்களுக்கு வரும் பொட்டணி வியாபாரிகளை போன்று கூவி திரியும் வெறும் சடங்காக மாறிப் போனதை நாம் அ றிவோம்.

இவ்வாற நிலையில் சமூகத்தினை பாதுகாப்தற்கு இழறவனிஉதவியால் முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என்ற கோஷம கற்றவர்களினால் முன் வைக்கப்பட்ட போது,அதே போல் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை பார்த்துக்  கொண்டு மௌனிகளாக இருக்க முடியாது.இது இந்த சமூகத்திற்கு செய்யும் பேரும் துரோகமாகும் என்பதனை தெளிவாக உணர்ததினாலும்,சமூகத்தின் மீது கொண்ட துாய்மையான பற்றுறுதியும் புதிய அரசியல் சரித்திரத்திற்கு வித்திட வந்தவர் தான் தற்போதைய அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை கூறியாக வேண்டும்.இந்த தனி மனித சிந்தணையின் வெளிப்பாடு சமூக கட்டமைப்பாக மாறி அது அரசியல் பலர்னாம வளர்ச்சி கண்டு இன்று ஆல விருட்சம் போல் பர்நது செல்கின்ற கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வளம் வருகின்றது.

 எதிர்வரும் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள நகர,பிரதேச சபைகளுக்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்ற ஒன்றை தோற்றுவித்து அதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் உள்ளடங்கி இந்த தேர்தலுக்கு முகம் கொடுத்துள்ளது.இந்த கூட்டமைப்பின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமுமான ஹஸனலி அவர்கள் தெரிவு செய்யப்பட்டமை கிழக்கில் வாழும் மக்கள் வரவேற்றும்,வாழத்தியுமுள்ளதை அறிய முடிகின்றது.

இது போல் இன்னும் எத்தனையோ அரசியல் பிரமுகர்கள்,கல்விமான்கள்,துறை சார்ந்தவர்கள்,போராளிகள் என நீண்ட பட்டியலையுடையவர்கள் இந்த கூட்டமைப்பில் இணைந்திருப்பது கிழக்கில் கூட்டமைப்பின் வெற்றிக்கு தளத்தினை இட்டுவிட்டது என்பதை அறிய முடிகின்றது என்பதுடன்,ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் கூலிப்படைகளின் பிரசாரங்களை நோக்குகின்ற போது அதரைன புரிந்து கொள்ளமுடிகின்றது.

கண்டியில்……………………..

தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது வேட்பாளர்களை தனித்து களம் இறக்கியுள்ளது.இது ஒரு வரலாற்று பதிவாகும்.நாட்டில் குறிப்பாக கிழக்கில் ஏற்பட்டு அலையின் வெளிப்பாடாக கண்டி மாவட்ட முஸ்லிம்கள் இம்முறை ஒன்றுபட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை கண்டி மாவட்டத்தில் உள்ள பிரதேச மற்றும் நகர சபைகளுக்கு தமது பிரதி நிதிகளை அனுப்ப துணிந்துள்ளது.இந்த கட்சிக்கும்,அதனது தலைமைக்கும் கிடைத்த  அங்கீகாரம் என்றால் மிகையாகாது.கண்டி மாவட்டத்தினை பொறுத்த வரை இம்முறை தேர்தலில் போதுமான சிறுபான்மை முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை கொண்டுவருவதை  உறுதிப்படுத்தும் வகையில் வேட்பாளர்கள் கடும் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கண்டி மாவட்த்தில் எவ்வித அரசியல் பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொள்ளாத இந்த நிலையிலும்,அப்பிரதேச மக்களின் வாழ்வாதார மற்றும் தொழில் வாய்ப்பு விடயங்களில் கணிசமான உதவிகளை வழங்கியுள்ளதை அம்மக்கள் மிகவும் நன்றியுடன் பார்க்கின்றனர்.கடந்த காலத்தில் பெரும்பான்மை அரசியல் கட்சிகளோடு வந்தவர்கள் மீண்டும் 5 வருடங்களுக்கு பின்னர் வருகின்றமையானது மீண்டும் கண்டி வாழ் முஸ்லிம் மக்களை அடகு வைக்கும் ஒரு சம்பவமாகவே பார்க்க  முடிகின்றது.இதனால் இம்முறை அவ்வாறான கட்சிகளை புற்க்கணித்து சமூகத்தின் தவையுணர்ந்து செயற்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய உறுதி பூண்டுள்ளனர்.

குருநாகலயில்…………..

கடந்த பாராளுமன்ற தேர்தலில ஜக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து வைத்தியர் சாபி அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களம் இறக்கியது.வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டததில் உள்ள முஸ்லிம் மக்கள் 53 ஆயிரம் விருப்பு வாக்குகளை வழங்கினர்.இதன் மூலம் குருநாகலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனக்கான் ஒரு தனித்தளத்தினை ஏற்படுத்தியிருந்தது,இதனது பங்காளிகளாக பலர் இருக்கின்றார்கள்.அவர்களில் சிலர் இலை மறைக்காய்களாகவும் இருக்கின்றதை புடம் போட வேண்டும்.

இந்த நிலையில் உள்ளுராட்சி தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி தமது சின்னத்தில் வேட்பாளர் சிலரை நிறுத்த சந்தர்ப்பம் தருவதாக கூறிய போதும்,எமது சமூகத்தின் தனித்துவத்தினை அடையாளப்படுத்த இந்த மாவட்டத்தில் எவரும் இல்லத நிலைய ஏற்பட்டுவிடுவதுடன்,இம்மக்களது உரிமைகளை பெற்றுக்கொள்ள அரசியல் ரீதியாக பலரிடம் கையேந்தும் துரதிஷ்டம் ஏற்படும் என்பதனையுணர்ந்து கொண்ட தலைமைத்துவம்,அம்மக்களது கோறி்க்கைக்கு இடம் கொடுத்து குருநாகல மாவட்டத்தில் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தனித்துவ மயில் சின்னத்தில் களம் இறங்கியுள்ளமை முழு நாட்டுக்கும் சிறுபான்மை சமூகத்தின் முகத்தினை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவே நோக்க முடிகின்றது.இதுவும் இந்த அரசியல் மாற்றத்திற்கு முக்கிய பங்கினை வகிக்கப் போகின்றது.

புத்தளத்தில் …..

புத்தளம் அரசியல் களம் என்பது விசித்திரமானது.எவர் எவருடனும் சேர்ந்து கேட்பதும்,பின்னர் சந்தர்ப்ப சூழ் நிலைகளுக்கு ஏற்ப அதனை மாற்றிக்கொள்வதும் வழமையானதொன்றாகும்.இவ்வாறு செயற்படுவதனாலும் அரசியல் ரீதியான பலமும்,தளமும் இன்மையினால் பாராளுமன்ற பிரதி நிதித்துவங்கள் ஒன்றுக்கு மேல் இரண்டாக ஆனமடுவ,வென்னப்பபுவ,சிலபாம் தொகுதிகளுக்கு செல்வது வழமையாகும்.இந்த நிலையினை மாற்றி பெரும்பான்மை கட்சிகளுடன்சேர்ந்துசிறுபான்மை பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சிகளை கடந்த பொதுத் தேர்தலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்த போதும்,இடையில் வந்த குழுவினரின்  வாக்குப் பறிப்பின் காரணத்தாலும்,கட்சிக்குள் இருந்த சில கழுத்தறுப்பினாலும் சொற்ப வாக்கினால் ஒரு பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது.

இருந்த போதும் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு வந்தபோதும்,இன்று வரை எவ்வித பிரதி பலனையும் எதிர்பாராமல் உதவி புரிந்து வரும் புத்தளம் சமூகத்திற்கு,அவர்களுக்கான அரசியல் தலைமைத்துவத்தினை வழங்கும் வகையில்,அனுபவம்,அறிவு,ஒழுக்க விழுமியங்களை கொண்ட எம்.எச்.எம்.நவவிக்கு தேசிய பட்டியில் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை வழங்கி அதன் மூலம் பல அபிவிருத்திகளை மக்கள் அருகில் கொண்டுவர கூடிய கட்சியாக அகில இலாங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கின்றது என்பது உண்மை.பாராளுமன்ற உறுப்பினர் நவவியுடன் இணைந்து அலசிப்ரி,ஆப்தீன் எஹியா ,டாக்டர் இல்யாஸ் என பலர் செயற்பட்டுவருகின்றதையும் இதன் போது சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

களுத்துறையில் ………

இலங்கை முஸ்லிம்கள் புலிகளினால் இழந்து போனதுக்கு அடுத்ததாக கடந்த ஆட்சி காலத்தில்  அழுத்கமையில் இடம் பெற்ற சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன் போதும்,ஏனைய சம்பவங்களின் போதும்,ஜனாதிபதி,பிரதமர்,பொலீஸ்  மா அதிபர் பொன்றோருடன் முரண்பட்டு மக்களது பாதுகாப்புக்கான உத்தரவாதம வழஙகப்படாத போகுமெனில் சர்வதேசத்தின் அழுத்தத்தையும் பெற்றுக் கொள்வதுடன்,வகிக்கும் பதவி இஇதற்கு தடையெனில் அதனையும் கழற்றிவிட்டசமூகத்தின் போராட்ட களத்தில் தயார் என்று அரசுக்கு காட்டசாட்டமாக எச்சரிக்கை செய்தவர் என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் என்பதை எவராலும் மறக்க முடியாது.

அளுத்கமை,கொழும்பு,தம்புள்ள,குருநால்,கின்தொட்ட உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு இனவாதிகளினால் அச்சுறுத்தல்கள்  வரும் போதெல்லாம் நேரம்,காலம் பார்க்காமல் அவ்விடத்திற்கு ஆஜராகும் ஒரு தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் இருந்துள்ளார்.இதனால் அகில இலாங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு விமோசனத்தை தேடிக்கொடுக்கும் என்று மக்கள்  அங்கீகரித்துள்தற்கு களுகத்துறை மாவட்டத்தில் பேருவளை,களுத்துறை நகர ,பிரதேச சபைகளுக்கு தனித்து மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றமை  மகிவும் முக்கியமானதொன்றாக நோக்கமுடிகின்றது.

கம்பஹா மாவட்டம் –

அதே போல் கம்பஹாவில் தனித்து களமிறங்கியதன் காரணமாக  பெரும்பான்மை கட்சிகளே தஞ்சம் என்றிருந்த சிறுபான்மை முஸ்லிம்  வாக்காளர்கள் தமது நிலையில் இருந்து இறங்கி இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வருகையினையேற்று அதனது வெற்றிக்காக உழைக்கும் நிலையினை காணமுடிகின்றது.இதன மூலம் கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மாநாகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்தவுள்ளமை குறிப்பிடக் கூடியதொன்று

இந்த வகையில் குறுகிய கால அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வருகை ஏனைய கட்சிகளுக்கு சவாலாக அமைந்துள்ளதை  தினந்தோறும் வெளிவரும் செய்திகள் மற்றும் முகப்புத்தக பக்கங்களில் பக்கம் பக்கமாக கண்ணீர் வடித்து எழுதும் அன்பர்களின் எழுத்துக்களை பறைசாற்றி நிற்கின்றன.சவால்களை எதிர் கொண்டு  தான் தோற்றாலும் பரவாயில்லை சமூகம் தோல்வியடையக் கூடாது என்று எண்ணும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனின் குறிக்கோள் பரந்து விரியட்டும் என்ற வாழ்த்தோடு தற்காலிக முத்தாய்ப்பு வைக்கின்றேன்.

விட்டதில் இருந்து மீண்டும் அடுத்த கட்டுரைகள் வரும்

Web Design by The Design Lanka