அக்கரைப்பற்றில் கஞ்சாவுடன் எழுவரும் ஒலுவிலில் இருவரும் கைது - Sri Lanka Muslim

அக்கரைப்பற்றில் கஞ்சாவுடன் எழுவரும் ஒலுவிலில் இருவரும் கைது

Contributors

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் கஞ்சா போதைப் பொருளுடன் வெவ்வேறு சம்பவங்களில கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் 25 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி யு.எல்.எம்.அஹ்கர் நேற்று (06) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் விசேட நடவடிக்கையில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் கஞ்சா போதைப் பொருளுடன் வெவ்வேறு சம்பவங்களில 5 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி யு.எல்.எம்.அஹ்கர் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பபோது இவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 25 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்பளித்தார்.

இதேவேளை அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு 10 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு நீதிபதி உத்தரவிடடு தீர்பளித்தார்.

அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த 3 ம் திகதி காலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ்சாஜன் ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அக்கரைப்பற்று வடிகான் வீதியில் வைத்து இருவரை கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்தனர்.

இவர்களுக்கு நீதிபதி யு.எல்.எம்.அஹ்கர் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 10 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை அம்பாiறை ஒலுவில் துறைமுகத்திற்கு முன்னால் கஞ்சா போதைப் பொருளுடன் இருவரை  (06) காலையில் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை 10.30 மணியளவில் பொலிசார் சுற்றிவளைத்தபோது துறைமுகத்திற்கு முன்னால் கஞ்சா போதைப் பொருளுடன் நின்று கொண்டிருந்த சாய்ந்தமருது 2ம் பிரிவைச் சேர்ந்த 36 மற்றும் 32 வயதுடைய இருவரை 8 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்(ad)

Web Design by Srilanka Muslims Web Team