அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி... - Sri Lanka Muslim

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி…

Contributors
author image

சலீம் றமீஸ்

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினதும் முயற்சியினால் அட்டாளைச்சேனை வள்ளக்குண்டு விவசாய பாதை அபிவிருத்தி பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

அட்டாளைச்சேனை விவசாய மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்திக் குழுவின் தலைவர் ஐ.எல்.தௌபீக் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

அமைச்சருடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான, தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் தேச கீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் , கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, அம்பாறை மாவட்ட முன்னாள் நீர்ப்பாசன பணிப்பாளர்(மத்திய) எந்திரி சமன் சிறிவர்த்தன,

 

 புதிய அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் நிமல் சிறிவர்த்தன, அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.ஐ.எம்.இஸட்.இப்றாஹீம், அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.எம்.சபீஸ், அமைச்சர் உதுமாலெப்பை அவர்களின் இணைப்புச் செயலாளர் யு.எல்.உவைஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் கே.எம்.ஸருக் உட்பட அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேச விவசாய குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசம் மாத்திரமல்ல கிழக்கு முழுவதும் உள்ள விவசாயிகளின் நன்மை கருதி யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட மூவின மக்களினதும் நீர்ப்பாசன திட்டம், விவசாய வீதி அபிவிருத்தி, விவசாய பாலம் அமைத்தல் போன்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மத்திய அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

 

12

 

13

 

14

 

15

Web Design by Srilanka Muslims Web Team