அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதான சிரமதானப்பணி முன்னெடுப்பு..! - Sri Lanka Muslim

அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதான சிரமதானப்பணி முன்னெடுப்பு..!

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

கொரோனா பரவல் காரணமாக மிகநீண்டகாலமாக பாவனையில் இல்லாமல் இருந்த அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதானத்தை சிரமதானம் செய்யும் பணி அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச சபை செயலாளர் எல் எம் இர்பான், சபை உதவித் தவிசாளர் ஏ.எம்.அஸ்ஹர், பிரதேச சபை உறுப்பினர்களான ரீ.எம் ஐய்யூப், ஏ.ஜி பர்சாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.தமீம் உட்பட அக்கரைப்பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலருடைய பங்கெடுப்புடனும் கனரக இயந்திரங்களின் உதவியுடன் நடைபெற்ற சிரமதான பணியில் மைதானம் பாவனைக்கு உகந்ததாக மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team