அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்களின் சம்மேள கலந்துரையாடல் ! - Sri Lanka Muslim

அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்களின் சம்மேள கலந்துரையாடல் !

Contributors

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத்தினை மேலும் வலுவூட்டும் வகையிலான முக்கிய கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் (17) வெள்ளிக்கிழமை மாலை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்றது.

அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எச்.சீ.எம்.லாபீர் முன்னிலையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் அக்கரைப்பற்று உலமா சபை உறுப்பினர்கள், அக்கரைப்பற்றில் உள்ள பள்ளிவாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள் சமூக நலன் கருதி தமது பங்களிப்புடன் அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத்தினை உரமூட்டி முன்நோக்கி கொண்டு செல்வதென ஏகமனதாக முடிவு செய்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team