அக்குரனையில் அரபு மொழியில் பேசுகிறார்கள் நாளை அதை உத்தியோக பூர்வ மொழியாக்க கோருவார்கள் - Sri Lanka Muslim

அக்குரனையில் அரபு மொழியில் பேசுகிறார்கள் நாளை அதை உத்தியோக பூர்வ மொழியாக்க கோருவார்கள்

Contributors

எம்.அம்றித்: அக்குரனையில் முஸ்லிம்கள் இன்று அரபு மொழியில் பேசுகிறார்கள் நாளை அவர்கள் அரபு மொழியை நாட்டில் உத்தியோக பூர்வ மொழியாக ஆக்குமாறு கூறுவார்கள். அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் ஏழு  நோக்கங்களில் ஒன்று அரபு மொழியை ஊக்குவிப்பதாகும் இதை அனுமதிக்க முடியாது. நாட்டில் கசினோ பிரச்சினையை விடவும் மிகப் பெரிய பிரச்சினை ஹலால் பிரச்சினைதான் என்று பொது பல சேனா தெரிவித்துள்ளது .

மேலும் எதிர்கால பிரச்சினைகளுக்கு முஸ்லிம் தீவிரவாத அமைச்சர்   ரவூப் ஹக்கீமும் ஆசாத் சாலியும்தான் பொறுப்பேற்க வேண்டும் . அவர்கள் வெளிநாட்டு தூதரகங்களிடம் பௌத்தகளும், பிக்குகளும் பள்ளிகளை தாக்குவதாக முறையிடுகின்றனர் .நாங்கள் தாக்கியதாக  ஒரு பள்ளியின் பெயரையாவது தரமுடியுமா  , அவர்கள் தம்புள்ளை விடையத்தை பெரிதாக்கி வைத்துள்ளார்கள் .

பள்ளிகள் தாஜ்மஹால் போன்று அழகான இடங்கள் . அநுராதபுரம் புனித பிரதேசத்தில் சிறிய கூடாரத்தை அகற்றுமாறு நாம் கோரியபோது அவர்கள் பள்ளிகளை தாக்குவதாக குற்றம் சாட்டுகின்றனர் . எந்த வகையிலும் தீவிரவாதம் தலைகாட்டுவதை அனுமதிக்கப் முடியாது.

ஆங்கில ஊடமகான   சிலோன் டுடே என்ற ஊடகத்துக்கு வழங்கியில நேர்காணலில் பொது பல சேனாவின் செயலாளர் லகொட அத்தே ஞானசார தேரர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

 

Web Design by Srilanka Muslims Web Team