அக்குறணைஅமானுல்லாவின் வீட்டுத் தோட்டத்தில் விசித்திரம்! இராட்சத கொடிக்கிழங்கு! - Sri Lanka Muslim

அக்குறணைஅமானுல்லாவின் வீட்டுத் தோட்டத்தில் விசித்திரம்! இராட்சத கொடிக்கிழங்கு!

Contributors

அக்குறணையில் அதிசயமான ஒரு கொடிக்கிழங்கு அகழ்ந்தெ டுக்கப்பட்டுள்ளது. அக்குறணை, குருகொடை சுலைமான் கந்த வீதியை சேர்ந்த எம்.ஜே.ஏ. அமானுல்லா அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் சுமார் 300 கிலோவிற்கும் மேற்பட்ட எடையுள்ள டைநோசர் வடிவில் இராட்சத கொடிக்கிழங்கு ஒன்று நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

கிழங்கை முழுமையாக வெளியே எடுத்து எடையை நிறுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக மேலும் அவர் தெரிவித்தார்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன் இது நடப்பட்டதாகவும்; கடந்த மூன்று தினங்களாக கிழங்கை தோண்டி எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் ஜனாப் அமானுல்லா அவர்கள் தெரிவித்தார். இதன் எடை மேலோ ட்டமான மதிப்பின் படி 300 கிலோவிற்கு அதிகமாகவே இருக்கும் என அவர் தெரிவித்தார்.

 

kandykandy1kandy2kandy3kandy4kandy5

 

Web Design by Srilanka Muslims Web Team