அக்குறனையில் பள்ளியுடைப்புகளுக்குஎதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. - Sri Lanka Muslim

அக்குறனையில் பள்ளியுடைப்புகளுக்குஎதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Contributors

 

பள்ளிவாயல்கள், மற்றும் சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத் தளங்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து இன்று  ( 3rd of January 2014 ) அக்குரணை நகரில் ஆர்பாட்டம் ஒன்று நடாத்தப்பட இருந்தது அறிந்ததே.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத்சாலி அவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள இருந்த நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆர்பாட்டம் கைவிடப்பட்டதாக அங்கிருக்கும் எமது நிருபர் சற்றுமுன் தெரிவித்தார்.

அத்துடன் ஆர்பாட்டம் ஏற்பாடாகி இருந்ததால் பிரதேசத்தில் போலீசார் கடமையில் ஈடுபட்டிருந்ததாகவும், தற்போது பொதுமக்கள் கலைந்து சென்றுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.(madw)

 

Web Design by Srilanka Muslims Web Team