அக்குறனையில் பள்ளிவாயல்கள் உடைப்புக்கு எதிராக பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்(படங்கள் இணைப்பு) - Sri Lanka Muslim

அக்குறனையில் பள்ளிவாயல்கள் உடைப்புக்கு எதிராக பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்(படங்கள் இணைப்பு)

Contributors

 

-இரண்டாம் இணைப்பு-
ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது .எனினும் குறிப்பிட்டது போல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

-ஜே.எம்.ஹபீஸ்-

மத்திய மாகான சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அஸாத் சாலியின் தலமையில் அக்குறணையில் பாரிய கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

நாட்டில் பல பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் கோயில்கள் கிரிஸ்தவ மதஸ்தலங்கள் உற்பட பல்வேறு  மத ஸ்தாபனங்கள் தாக்கப்படுவதை எதிர்த்து அக்குறணை நகரில்  இன்று மதியம்(2014.01.03) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

இங்கு ஊடகயியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அஸாத் சாலி அண்மைகாலமாக நாட்டில் 29 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் இறுதியாக அம்பதென்னையில் ஒரு பள்ளிவாசல் தாக்கப்பட்டது. இதன் பின் இவ்வாரான செயல்கள் இடம் பெறாது தடை செய்வதற்கு அரசை வற்புருத்தும் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டமாகவே இவ் வார்ப்பாட்டம் இடம் பெறுவதாகவும் தெரிவித்தார்.

அக்குறணை நகரின் பாதுகாப்புக்காக பெருமளவில் பொலீஸார் நிருத்தப்பட்டிருந்தனர்.

 

 

Web Design by Srilanka Muslims Web Team