அசத்திய கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் » Sri Lanka Muslim

அசத்திய கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம்

p

Contributors
author image

யூ.கே. காலித்தீன்

கல்முனை யங் ஸ்டார் இளைஞர் அமைப்பு நடாத்திய மர்ஹும் எஸ். எம். வஹாப் அவர்களின் ஞாபகார்த்த T20 கிறிக்கெட் சுற்றுப் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கல்முனை ஜிம்ஹானா விளையாட்டுக்கழகத்தை எதிர்கொண்ட கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டினால் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியானது கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை ஜிம்ஹானா விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் சார்பில் ஸப்றி 4 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், கரன் 4 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், ஸகில் 4 ஓவர்கள் பந்துவீசி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

150 ஓட்டங்களைப் இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் 18.1 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டினால் அபார வெற்றி பெற்றது.

இதில் றிஸாட்கான் 34 பந்துகளுக்கு 40 ஓட்டங்களையும், முனவ்வர் 14 பந்துகளுக்கு 32 ஓட்டங்களையும், நபீட் 26 பந்துகளுக்கு 34 ஓட்டங்களையும், ஹாறுன் 27 பந்துகளுக்கு 33 ஓட்டங்களையும், அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெற்றியை பெற்றனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் நபிட் தெரிவானதுடன் போட்டித்தெடரின் சிறந்த வீரராக கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அஹ்னாப் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் ஜவாத் பிரதம அதிதியாகவும், கல்முனை பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.கே. ஜெயனித்தி, கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர் எம்.எச். ஹனி, முன்னால் கல்முனை மாநகர சபை உறுப்பினர் வெஸ்டர் ஏ.எம்.றியாஸ், ஓய்வு பெற்ற கல்வியல் கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா உட்பட சனிமௌண்ட் விளையாட்டு கழக பொதுச் செயலாளர் எம்.ஐ. அப்துல் மனாப் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

 p-jpg2 p-jpg2-jpg3 p-jpg2-jpg3-jpg4

Web Design by The Design Lanka