அசாத் சாலிக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்..! - Sri Lanka Muslim

அசாத் சாலிக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்..!

Contributors

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கர்வாத தடை சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் ஆகியவற்றின் கீழ் சட்ட மா அதிபர் சஞ்ஜய் குமார் ராஜரத்னம் குற்றப் பகிர்வுப் பத்திரிகையை கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்ததன் ஊடாக இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று (28) உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.

கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள எஸ்.சி.எப்.ஆர். 97/2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு வந்தபோதே, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை நீதிமன்றில் தெரிவித்தார்.

அசாத் சாலிக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
Digital News Team June 28, 2021

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவானது , உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தந்தன, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரனி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பயிஸ் முஸ்தபா, மைத்திரி குணரத்ன மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீத் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

பிரதிவாதிகளுக்காக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் பிரசன்னமானார்.
இதன்போது மன்றில் விடயங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்,
‘ ஆசாத் சாலி பிரதானமாக இரு விடயங்களை மையப்படுத்தி 2021 மார்ச் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். ஒன்று கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், இன, மத குழுக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி வெளியிட்ட கருத்துக்களை மையப்படுத்தியதாகும்.

மற்றையது மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகார சந்தேக நபர்களுக்கு உதவியளித்தமை தொடர்பிலான விவகார விசாரணையாகும். இந்த விசாரணைகள் தொடர்கின்றன.
எனினும் ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கடந்த வெள்ளியன்று கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார்.

இதன்போது மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனையின் பேரில் வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, அவ்வாறெனில் அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்று திகதி குறிக்குமாறு கோரினார். அதனை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதன்போது மனுவில், பாதுகாப்பு அமைச்சரின் தடுப்புக் காவல் உத்தரவு சட்டவலுவற்றதென தீர்ப்பறிவிக்குமாறும் இடை க்கால தடை உத்தரவு வழங்கி, கைதியான அசாத் சாலியை நீதிமன்றில் ஆஜர் செய்ய உத்தரவிட வேண்டும் எனும் கோரிக்கை தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வாதங்களை முன் வைத்தார்.

‘ தற்போதும் அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில், அவரை நீதிமன்றில் ஆஜர் செய்ய முடியும் என மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கும் பட்சத்தில் மன்றில் ஆஜர் செய்ய தயார்’ என தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, தெரிவிக்கையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் அது தொடர்பில் உறுதிப்பாட்டை மன்றுக்கு தெரிவித்துள்ள நிலையில், இடைக்கால தடை உத்தர்வு அவசியமற்றது என குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைகளுக்காக எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரத்தின் பிரதிகளை உயர் நீதிமன்றுக்கும், மனுதாரரின் சட்டத்தரணிக்கும் கையளிக்குமாறு உயர் நீதிமன்றம் பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவித்தது.

Web Design by Srilanka Muslims Web Team