அசாத் சாலிக்கு எதிரான வழக்கில் குற்றங்களை நிரூபிக்க, ஆதாரம் இல்லை என்பதால் அவரை விடுவியுங்கள் - மைத்திரி குணரத்ன வாதம்..! - Sri Lanka Muslim

அசாத் சாலிக்கு எதிரான வழக்கில் குற்றங்களை நிரூபிக்க, ஆதாரம் இல்லை என்பதால் அவரை விடுவியுங்கள் – மைத்திரி குணரத்ன வாதம்..!

Contributors

தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரி, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல, நேற்று (06) உத்தரவிட்டார். 

இந்த வழக்கில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் சந்தேக நபரை விடுவிக்குமாறு, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறப் போவதாக, குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், வழக்கு விசாரணை, வரும் 13ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team