அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை..! - Sri Lanka Muslim

அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை..!

Contributors

கைது செய்யப்பட்ட முன்னாள் ஆளுநர், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

சட்டமா அதிபர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொதுச் சட்டம் தொடர்பிலும் அவர் முன்வைத்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team