அசாத் தீவிரவாதத்தை எதிர்த்தவர்: தரீக்கா கவுன்சில்..! - Sri Lanka Muslim

அசாத் தீவிரவாதத்தை எதிர்த்தவர்: தரீக்கா கவுன்சில்..!

Contributors

முன்னாள் ஆளுனர் அசாத் சாலி, இலங்கையில் தீவிரவாதம் வளர்வதை முழு மூச்சாக எதிர்த்து நின்றவர் எனவும் அவரது விசாரணையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்து அவரை விடுவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது தரீக்காக்களின் சுப்ரீம் கவுன்சில்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை வேண்டியுள்ள குறித்த அமைப்பினர், சோனகர்.கொம்முக்கு மேலும் கருத்து வெளியிடுகையில் 2017ம் ஆண்டே சஹ்ரான் போன்றவர்களைக் கைது செய்யாது அலட்சியமாக இருந்த அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும் என அசாத் சாலி குரல் எழுப்பியவர் எனவும், அவர் ஒரு போதும் தீவிரவாதத்தைப் போதித்தவர் இல்லையெனவும் விளக்கமளித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததாக கூறப்படும் அசாத் சாலிக்கு எதிராக இதுவரை உத்தியோகபூர்வமாக குற்றச் சாட்டுகள் பதிவாகாத நிலையில் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team