அசின் விராது தேரரின் இலங்கை விஜயமும்! கேள்விக் குறியாகியுள்ள முஸ்லீம்களின் எதிர்காலமும்... - Sri Lanka Muslim

அசின் விராது தேரரின் இலங்கை விஜயமும்! கேள்விக் குறியாகியுள்ள முஸ்லீம்களின் எதிர்காலமும்…

Contributors
author image

Press Release

மியன்மாரில் பல்லாயிரக்காணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களை கொன்று குவிக்க காரணமாக‌ இருந்தவர் என கூறப்படும்  அஸின் விராது  பௌத்த துறவி நாளை கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுபலசேனா சங்க மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொள்வதற்காக  அழைக்கப்பட்டு இன்று காலை இலங்கைக்குள் வந்துள்ளமை முஸ்லிம்கள் மத்தியில் பெறும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்கா சென்றுள்ள ஜானாதிபதி மஹிந்த ராஜபகஷ இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஒன்றியத்தின் செயளாலரிடத்தில் “இலங்கை  முஸ்லிம்களை எனது உடன் பிறப்புகள் போல பராமறித்து கொள்வேன்” என உறுதியளித்து 48 மணித்தியாளங்கள் கூட கடந்திராத‌ நிலையில் அசின் விராது தேரர் இலங்கைக்குள் கால் பதித்துள்ளார்.

 

உலக பெளத்த மக்கள் போற்றிப்புகளும் முன்மாதிரியான தலைலாமா தேரர் போன்ற தலைவர்கள் இருக்கும் போது உலக அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அசின் விராது தேரர் இலங்கைகுள் வந்திறங்கியுள்ளமை முஸ்லிம்களின் எதிர்காலத்தை   கேள்வி குறியாக்கியுள்ளது.

 

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இலங்கைக்குள் வந்த போதெல்லாம் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை நாட்டிலிருந்து விரட்டியடித்த  எமது முஸ்லீம் அரசியல் தலைமைகள் அசின் விராது தேரரின் வருகைக்காக வாய்திறக்காமல் இருப்பது எமது சமூகத்துக்கு கிடைத்துள்ள சாபக்கேடாகும்.

 

ஐ நா வில் அரசாங்கத்துக்கு   பிரச்சினைகள் வரும்போது அரபு நாடுகளில் ஆதரவு தேடித்திரியும் அரசங்கத்துக்கு தமது மானத்தை அடகுவைத்துள்ள எமது முஸ்லீம் தலைமகள் இது போன்ற பாரதூரமான விடயங்களை தடுத்து நிறுத்த  குறைந்தபட்சம் பாதுகாப்பு செயளாலரை சந்திக்க அவரது அலுவலகத்துக்கு கூட சென்றிருக்கமாட்டர்கள்.

 

ஊவா தேர்தல் காலத்தில் பதுளை பள்ளிவாயல் கல்வீச்சு தக்குதலுக்கு உள்ளான போது துடியாய் துடித்து போன எமது அமைச்சர்கள் சிலர் அசின் விராது தேரரின் வருகையை எதிர்ந்து  குரல் கொடுக்க அடுத்த தேர்தல் வரும் வரை நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

 

வருமுன் காக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர் கண்டன அறிக்கைகள் விடுவதிலும் அரச பாதுகாப்புடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு  சென்று மக்கள் மத்தியில் நீளிக்கண்ணீர் வடிக்கவும் தெரிந்த அர்சாங்கங்கத்தின் பங்காளிகளான சில‌ அரசியல் தலைவர்கள் முஸ்லீம்களின் இருப்பை பாதுகாத்து கொள்ள வருமுன் காக்கும் ஆக்கபூர்வமாண நடவடிக்கைகளை மேற்கொள்ள எப்போது ஒன்றினைந்து செயற்பட முன்வருவார்கள்?

 

எம் எஸ் எம் பைரூஸ்
ஐ.தே.க மேல் மாகாண சபை உறுப்பினர்,
ஐ.தே.க மத்திய கொழும்பு அமைப்பாளர்.

Web Design by Srilanka Muslims Web Team