அசீஃபா பானு பாலியல் - கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நேர்மையான அதிகாரி..! » Sri Lanka Muslim

அசீஃபா பானு பாலியல் – கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நேர்மையான அதிகாரி..!

30653158_1918901101515938_3180110007773429760_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Marx Anthonisamy


காஷ்மீரில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். ஏழுவயதுப் பெண்ணை,இல்லை குழந்தையைத் தூக்கிச் சென்று ஒரு கோவிலுக்குள் வைத்து, மயக்கமருந்து கொடுத்துப் பலமுறைப் பாலியல் கொடுமை செய்து கொன்று தூக்கி எறிவதும் அங்கு நடக்கும். எறிந்த கயவன்களைக் கைது செய்யக் கூடாது என ‘ஹிந்து ஏக்தா மஞ்ச்’ எனும் ஒரு இந்துத்துவ அமைப்பு எள்ளளவும் வெட்கமோ, குற்ற உணர்ச்சியோ இன்றித் தெருவில் வந்து போராடுவதும் கூட அங்கு சாத்தியம். அந்த ஊர்வலத்தில் சவுத்ரி பால்சிங், சந்தர் பிரகாஷ் கங்கா என்ற இரண்டு பாஜக எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்வான்கள்.

எல்லாம் நம் கண்முன், உலகின் கண்முன் இந்த மூன்று மாதங்களுக்குள் நடந்தவைதானே.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி அது. அங்குள்ள பகரிவால் முஸ்லிம் நாடோடிப் பழங்குடிகளை விரட்டியடிப்பது அவர்களின் திட்டம். அதன் ஒரங்கமாக அம்மக்களை மிரட்டி விரட்ட மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடூர நடவடிக்கையாகத்தான் சென்ற ஜன 10 அன்று சிறுமி அசீஃபா பானு கடத்தப்பட்டாள். யார் யார் எல்லாம் வந்து, உள்ளூர் போலீஸ் கொடூரன்கள், ஒரு ஓய்வுபெற்ற அதிகாரி உட்பட , எப்படி எல்லாம் அந்தக் கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன என்பதை எல்லாம் எழுத மனம் வரவில்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

மூன்று மாதம் கடும் அரசியல் தலையீடுகள். பாஜக மிரட்டல்கள் எல்லாவற்றிற்கும் அப்பால் கொலையாளிகளை இன்று கூண்டில் ஏற்றியுள்ள சீனியர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் ஜல்லா அவர்களுக்கும் அவரது உதவியாளர் நவீத் பிர்சாதாவுக்கும் நம் மரியாதைகளையும் நன்றிகளையும் உரித்தாக்குவோம்.

காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் ஜல்லா ஒரு காஷ்மீரப் பண்டிதர் என்பது குறிப்பிடத் தக்கது.

30653158_1918901101515938_3180110007773429760_n 30689349_1918901258182589_2792524243357663232_n aasifa.jpg2

Web Design by The Design Lanka