அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பள்ளிவாயல்களில் தொடர்ந்தும் தொழுகையினை முன்னெடுத்து செல்லுங்கள் : அமைச்சர் றிஷாத் - Sri Lanka Muslim

அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பள்ளிவாயல்களில் தொடர்ந்தும் தொழுகையினை முன்னெடுத்து செல்லுங்கள் : அமைச்சர் றிஷாத்

Contributors

கொழும்பின் தெஹிவளை பிரதேசத்தில்அமைந்துள்ள பள்ளிவாசல்களில் தொழுகையினை முன்னெடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் பள்ளிபரிபாலன சபையினரிடம் கேட்டுள்ளதுடன்,தற்போதும் அங்கு தொழுகை இடம் பெற்றுவருகின்றது என்றும் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெஹிவளையில் உள்ள சில பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலீஸார் தொழுகைகளை நடத்த வேண்டாம்  அதனால் பிரச்சினைகள் வரும் என்று எச்சரித்து சென்றமை தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் பிபிசி தமிழோசை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கேள்வி –

இந்த பிரச்சினை உங்க பார்வைக்கு வந்த போது அரசாங்க தரப்பு அமைச்சர் என்ற வகையில் நீங்க என்ன நடவடிக்கையெடுத்தீங்க ?

பதில்-

இது குறித்து காலை 3 பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினரையும் சந்தித்தோன்.அப்போது அவர்கள் அந்த பிரதேசத்தின் பௌத்த மதகுரு ஒருவர் தொடர்ந்தேச்சையாக இங்கு தொழுகையினை நடத்தவிடாது தடுத்துவருகின்றார்.அவர் தான் இதனை செய்து வருவதாகவும் அவர்கள் என்னிடம் கூறினர்.இவர் தான் பொலீஸாரை துாண்டி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தம்மிடம் சொல்லப்பட்டது.

இது குறித்து தற்போதைய பதில் பொலீஸ் மா அதிபர் நவரட்ணவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வாறான விடயங்கள் முஸ்லிம்கள் மத்தியில் ஆத்திரத்தையேற்படுத்துவதாக கூறிய போது,இது குறித்து உரிய நடவடிக்கைகளை தான் எடுப்பதாக பிரதி பொலீஸ் மா அதிபர் தன்னிடம் உறுதியளித்தாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

அதனையடுத்து கொழும்புக்கு பொறுப்பாக இருக்கின்ற சிரேஷ்ட பொலீ்ஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,சில பௌத்த மதகுருமார்கள் வந்து இவ்வாறு தங்களிடத்தில் முறையிடுகின்றார்கள் சட்ட ரீதியற்ற முறையில் இந்த பள்ளிவாசல்கள் இயங்குவதாக கூறுகினற்னர் என்று

கேள்வி –

காவல் துறையினர்கள் தமது தரப்பில் பள்ளிவாசல்கள் சட்ட ரீதியாக இல்லையென்று கூறுவதில் நியாயம் இருக்கின்றதா?

பதில்-

அதற்கு நான் பதிலளித்தேன்.அவ்வாறு சட்ட ரீதியற்ற முறையில் பள்ளிவாசல்கள் நடந்தால்,அத தொடர்பில் சட்ட ரீதியான சட்ட நடவடிக்கையெடுக்க  வேண்டுமே தவிர,பொலீஸார் பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகைகளை நடத்த வேண்டாம் என்று சொல்வதற்கு எந்நவிதமான உரிமையுமில்லை என்று .அதற்கு அவர் என்னிடம் தெரிவித்தார் நாளை புதன்கிழமை பள்ளிபரிபாலன சபையினர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக.

எது எவ்வாறாக இருந்தாலும் இது தொடர்பில் நான் ஜனாதிபதி மற்றும் உரிய பாதுகாப்பு உயர்தரப்பினரிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளளேன் என்றும் கூறினேன்.இந்த விடயங்களில் எவ்வித விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லையென்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.பள்ளி நிர்வாகிகளுக்கும் நான் வேண்டுகோள்விடுத்துள்ளேன் தமது மதக் கடமைகளை செய்யுமாறு,எவ்வித தடங்கள்களும் வந்தாலும் மதக் கடமைகளை முன்னெடுப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணிகளும்,பள்ளி நிர்வாகத்தினரும்  பொலீஸ் நிலையத்திற்கு சென்று இது குறித்த முறைப்பாடு ஏதும் இருக்கின்றதா என்று கேட்ட போது,எழுத்து மூலமான முறைப்பாடுகள் இல்லை.சில பௌத்த மதத் தலைவர்களி்ன் உயர் அளுத்தம் காரணமாக கலவரங்கள் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தினாலேயே இதனை செய்ததாக பொலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி –

அரசாங்கத்தில் பல முஸ்லிம்  கபினட் அமைச்சர்கள் இருக்கின்றீர்கள் நீங்கள் எல்லோரும் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு ஏன் முஸ்லிம்களும் ஏனையவர்களுடன் இணைந்து வாழுவதற்கான சூழலை ஏற்படுத்திதருவதற்கான அளுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று கேட்க முடியாது ?

 

பதில் –

கடந்த காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம் பெற்ற போது ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரை  நேரடியாக  சந்தித்து இது எங்களது உள்ளங்களை உடைத்துள்ளது இதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.இருந்த போதும் அரசாங்கத்துக்குள் பல தரப்புக்கள் இருக்கின்றனர்.முஸ“லிம் தரப்புக்களை போன்று ,அதில் தீவிர பௌத்த போக்குகளை கொண்ட அமைச்சர்களும் இருக்கின்றனர்.எனவே அதற்குள் நாங்கள் இருந்து கொண்டு எமது மக்களது பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கையெடுத்தவருகின்றோம்.அதற்காக குரல் கொடுத்து கொண்டிருக்கின்றோம்.இந்த சதியின் பின்னர் ஒரு சிலர் இருக்கின்றார்கள்.அவர்கள் அடையாளம்காட்டப்பட வேண்டும்.அதே போல் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தியுள்ளோம்.

கேள்வி-

இப்பிரதேச பள்ளிவாசல்களை மூடிவிடுமாறு செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்.

பதில்-

பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த வேண்டாம் என்று கூறுவதன் மறைமுகம் பள்ளிவாசல்களை மூடுவது தான்.ஆனால் இப்பள்ளிவாசல் மூடப்படவில்லை,தொழுகை இடம் பெறுகின்றது.எனவே இந்த விடயத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள் மிகவும் உறுதியாக இருக்கின்றார்கள்.இவ்விடயத்தில் முஸ்லிம் சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பிபிசி தமிழேதசைக்கு தெரிவித்துள்ளார்

(நன்றி –பிபிசி)

Web Design by Srilanka Muslims Web Team