அடுக்குமாடிக் கட்டடங்களில் தீப்பிடித்தால் தப்புவது எப்படி? » Sri Lanka Muslim

அடுக்குமாடிக் கட்டடங்களில் தீப்பிடித்தால் தப்புவது எப்படி?

bb

Contributors
author image

BBC

மேற்கு லண்டனின் 24 மாடி கட்டடத்தில் தீ ஏற்பட்டு ஏறக்குறைய முற்றிலும் எரிந்திருப்பது ஐக்கிய ராஜ்ஜியத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

க்ரின்ஃபெல் டவரில் தீ அணைக்கப்படுகிறதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உலக அளவிலுள்ள தீயணைப்பு சேவைகள் உயரடுக்குக் கட்டடங்களில் ஏற்படும் தீயை கையாள வேண்டியுள்ளது. அத்தகையவற்றில் இருந்து கற்றுகொண்ட பாடங்கள் என்ன?

தீயணைக்கும் தளம்

சம்பவ இடத்தை வந்தடையும் தீயணைப்பு வீரர்கள், தீ பற்றியெரியும் உயரடுக்கு கட்டடத்திற்கு கீழே இரண்டு மாடி அளவுக்கான தளத்தை வழக்கமாக அமைக்கிறார்கள் என்று பாதுகாப்பு ஆலோசகராக மாறியுள்ள முன்னாள் தீயணைப்பு வீரர் பாப் பார்கின் தெரிவிக்கிறார்.

அவ்வாறு தளம் அமைப்பது தீயை அணைப்பதற்கு நுழைந்து செல்லுகின்ற கட்டுப்பாட்டுப் பகுதிகளை உருவாக்க உதவுகிறது.

க்ரின்ஃபெல் டவரில் தீ அணைக்கப்படுகிறதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதனால், தீயணைக்க செல்லும் வீரர்களை கண்காணிக்கலாம். சுவாசிப்பதற்கு உதவும் கருவிகளை சோதித்துக் கொள்வதன் மூலம் ஆபத்தான, புகை நிறைந்துள்ள பகுதியில் அவர்கள் எவ்வளவு காலம் தங்கியிருக்கலாம் என்று தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு வினாடியும் முக்கியம்

சுவாசிப்பதற்கு இருக்கும் காற்றின் அளவை பொறுத்துதான் ஒவ்வொரு நபரும் தீயை அணைக்க பணிபுரியும் நேரம் அமையும். எனவே, கருவியோடு ஒரு கட்டடத்தில் ஏறுவதற்கு செலவு செய்யப்படும் எந்வொரு நிமிடமும், தீணை அணைக்க போராடும் தருணம் என்பதால் மிகவும் முக்கியமானது.

10 மாடிக்கு செல்வதானால் சுவாசிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான காற்றை பயன்படுத்த போகிறீர்கள். இதற்காகவும், வேறு பலவற்றிற்காகவும் தீ எரிகின்ற கட்டடத்தின் இரண்டு மாடி வரை கட்டுப்பாட்டு பகுதியை தீயணைப்பு வீரர்கள் அமைப்பார்கள் என்று பார்கின் தெரிவிக்கிறார்,

சம்பவ இடத்தை பார்வையிடும் பிரதமர் தெரீசா மேபடத்தின் காப்புரிமைPA

தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடிந்தவுடன், மக்கள் யாராவது சிக்கியிருப்பதாக தகவல் இருந்தால், தீயை அணைப்பதற்கு பதிலாக சிக்கியிருப்போரை காப்பாற்றுவதில் தான் உடனடி கவனம் செலுத்தப்படும். அதன் காரணமாக தீயணைப்பு வீரர்கள் குறைந்தபட்ச கருவிகளையே தங்களுடன் எடுத்துச்செல்வர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சிலவேளைகளில் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்வதற்கு போராடியாக வேண்டும். சந்தேக இல்லாமல் மக்களின் வாழ்க்கை ஆபத்திற்குள்ளாகி இருப்பதாக தெரிந்தால், அவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

வேகமாக பரவிய தீ

ஆனால், லண்டனில் கிரன்ஃபெல் டவர் கட்டடத்தில் தீ மிக விரைவாக பரவி, ஏறக்குறைய அந்த கட்டடம் முழுவதும் தீ பற்றிக்கொண்டதால் எதிர்கொண்ட நிலைமை, மிகவும் கடினமானதாக அமைந்தது என்று பார்கின் தெரிவிக்கிறார்.

மக்களைக் காப்பாற்ற 20 மாடிகளுக்கு மேலாக ஏறி செல்ல வேண்டுமென்பது மிகவும் கடினமானது என்று அவர் தெரிவிக்கிறார். மீட்கப்படும் நபருக்கும் சுவாசக்காற்று இல்லாமல் கட்டடத்திற்கு வெளியே கொண்டு வருவது என்பது மிகவும் ஆபத்தானது.

கொழுந்துவிட்டு எரியும் தீபடத்தின் காப்புரிமைNATALIE OXFORD/PA

கட்டடத்தில் தீ பரவியிருக்கிற அளவை பொறுத்து, அந்த கட்டடத்தின் தாழ்வான மட்டத்தில் இருந்து தீயணைப்பு படையினரும் செயல்பட வேண்டியிருக்கும்.

கட்டடத்தில் உலோகம் வேய்தல்

கட்டடத்தின் மீது உலோகங்களை வேய்தல்தான் தீ பரவுவதற்கு காரணம் என்று தீ பாதுகாப்பு நிபுணர்கள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால், ஒரு மாடிக்கு பின்னர் அடுத்த மாடி என தீ மெதுவாக பரவுவதை கட்டடத்தின் மீது உலோகங்களை வேய்தல் தடுத்துவிடுகிறது.

துபாயில், 2015 ஆம் ஆண்டு 79 அடுக்கு வானளாவிய கட்டடம் உள்பட உயரடுக்கு கட்டடங்களில் ஏற்படும் விபத்துக்கள், இத்தகைய உலோ வேய்தல் மூலம்தான் தீ வேகமாக பரவியதாக டெனபிள் துபாய் பொறியியல் ஆலோசனை நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிபடத்தின் காப்புரிமைAFP/NATALIE OXFORD

இந்த தீ அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தவில்லை. இந்த கட்டடங்களின் வடிவமைப்பும் கட்டுமானமும் தீணை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு உதவியதோடு புகை புகாத, தீ எரியாத பாதுகாப்பு பகுதிகள் வழியாக குடியிருப்பவாசிகள் வெளியேற உதவியது என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயிர் காக்கும் வடிவமைப்பும், கட்டுமானமும்

இச் சம்பவத்தில், 6 அல்லது 7 மணிநேரம் தீ எரிந்திருக்கிறது. ஆனால், அதில் குடியிருந்தவர்கள் வெற்றிகரமாக வெளியேறிவிட்டனர். இந்த விபத்துக்களில் அதிக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று இந்த நிறுவனத்தின் சாம் அல்கோக் தெரிவித்திருக்கிறார்.

“கட்டட வடிவமைப்பும், கட்டுமானமும் தான் உயிர்களை காத்தன என்பது என்னுடைய கருத்து” என்கிறார் அல்கோக்.

கிரன்ஃபெல் டவர் கட்டடத்தில் இதற்கு முந்தைய தீ விபத்துக்களில் குடியிருப்புவாசிகள், அவர்களின் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு சொல்லப்பட்டதற்கான காரணத்தை டெனபிள் நிறுவன தீ மேலாண்மை பொறியிலாளர் இக்வான் ரஸலி புரிந்து கொள்கிறார்.

எரியும் க்ரின்ஃபெல் டவர்படத்தின் காப்புரிமைREUTERS/TOBY MELVILLE

ஒவ்வொரு மாடிக்கும் இடையில் தீயை தடுக்க சிறப்பு வசதிகள் இருந்தால் மக்களை வீட்டிலேயே தங்கியிருக்க சொல்லலாம். ஆனால், லண்டன் சம்பவத்தில் வழங்கப்பட்ட இந்த அறிவுரை தவறானது என்று அவர் கூறியுள்ளார்.

வான்வழி தளங்கள்

உயர்ந்த கட்டடங்களில் தீ விபத்து ஏற்படும்போது, அந்த கட்டடத்தின் வெளியில் இருந்து செயல்படுவதற்காக வான்வழி தளங்களை பயன்படுத்துவதை அனுமதிக்கலாம். லண்டனின் தீயணைப்பு வீரர்களின் வான்வழி தள வாகனங்கள் 32 மீட்டர் உயரம்தான் செல்லக்கூடியவை. எனவே, அந்த உயரம் வரையிலான தீயை மட்டுமே அணைக்கக்கூடியதாக அமைந்துவிட்டது.

துபாயில், புர்ஜி காலிஃபா போன்ற 160 மாடிகளுக்கு மேலான வானளாவ உயர்ந்த கட்டடங்கள், 80 மீட்டர் உயரம் வரை செல்லக்கூடிய உயரமான வான்வழி தளங்களை கொண்டிருக்கின்றன என்று அல்கோக் தெரிவிக்கிறார். ஆனால், சிறப்பு மின்தூக்கி உள்பட தீயணைப்பு வீரர்கள் எளிதாக கட்டடத்திற்குள் நுழையும் வசதிகள் மிகவும் முக்கியமானவை.

தீ மற்றும் புகையால் பாதிக்கப்படாத அடுக்குமாடிகளான கிரன்ஃபெல் டவர் போன்ற ஐக்கிய ராஜ்ஜியத்தின் அடுக்குமாடி கட்டடங்களில் வாழும் குடியிருப்புவாசிகள், அவர்களின் வீடுகளிலே தங்கியிருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தீயணைப்பு வீரர்களும், வெளியேறும் குடியிருப்புவாசிகளும் ஒரே மாடிப்படியை பயன்படுத்துவது தான் இதற்கு காரணம் என்று கட்டட பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

க்ரின்ஃபெல் டவர் எரிவதை பார்க்கும் நபர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனிப்பட்ட வீடுகளை பாதிக்கும் தீயை கட்டுப்படுத்துவதாகவும், மாடிப்படிகளையும், கூடங்களையும் புகைப்புகாத அளவிற்கு சிறிதுநேரம் வைத்திருப்பதாகவும் பாதுகாப்பு தரக்கட்டுப்பாடுகள் அமைகின்றன என்று தெரிவிக்கும் கிரஹாம் ஃபீல்டுஹெஸ், தியை அணைப்பதும், மக்களை வெளியேற்றுவதும் கவனமாக மேலாண்மை செய்யப்படுகின்றன என்கிறது.

“தீணை அணைக்க முயற்சித்து கொண்டிருக்கும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் மாடிப்படிகளில் கீழிறங்கி வருவதை தீயணைப்பு வீரர்கள் விரும்புவதில்லை” என்று பிபிசியிடம் தெரிவிக்கிறார் இந்த தீ பாதுகாப்பு நிபுணர்.

ஆனால், கிரன்ஃபெல் டவரில், செயல்பட வேண்டியவை, சரியாக செயல்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

Web Design by The Design Lanka