அடுத்த வருடம் ஏப்பிரல் மாதத்தில் இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் - சுமந்திரன்..! - Sri Lanka Muslim

அடுத்த வருடம் ஏப்பிரல் மாதத்தில் இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் – சுமந்திரன்..!

Contributors

மனித உரிமை கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால் இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கநேரிடும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


மனித உரிமை கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால் ஏப்ரல் மாதமளவில் 500 மில்லியன் டொலர் பெறுமதியான ஐரோப்பிய ஏற்றுமதி வர்த்தக சலுகைகளை இழக்கும் ஆபத்துள்ளது என சுமந்திரன் எக்கனமி நெக்ஸ்ட்டிற்கு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாத தீர்மானத்தின் அடிப்படையில் ஜிஎஸ்பி வரிச்சலுகையை விலக்கிக்கொள்வது என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே தீர்மானித்துவிட்டது என தான் கருதுவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


மனிதஉரிமை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அரசாங்கம் அடுத்த வருடம் ஏப்பிரலில் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் என அவர் தெரிவித்துள்ளார்..

Web Design by Srilanka Muslims Web Team