பாலமுனை ஊர்க்கரை வீதியின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி - Sri Lanka Muslim

பாலமுனை ஊர்க்கரை வீதியின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி

Contributors
author image

சலீம் றமீஸ்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலமுனை ஊர்க்கரை வீதியின் இரண்டாம் கட்டப்பணி ஒரு மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

 

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

பாலமுனை தேசிய காங்கிரஸின் அமைப்பாளர் கே.எல்.உபைத்துல்லா தலைமையில் இடம் பெற்ற இந்த வைபவத்தில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்பணியினை ஆரம்பித்து வைத்தார்.

 

அமைச்சருடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மானமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் உட்பட் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரனி ஆரீப் சம்சுதீன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார்,

 

உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கிழக்கு மாகாண கட்டிடத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.எஸ். வேல் மாணிக்கம், கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் கே.அறுந்தவராஜா, இலங்கை மின்சார சபையின் பிராந்திய பொறியியலாளர் ஹைக்கல், மத்திய நீர்ப்பாசன தினைக்களத்தின் அக்கரைப்பற்று பொறியியலாளர் எம்.ஐ.எம்.இஸட்.இப்றாஹீம், உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், பாலமுனை பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

09

 

10

 

11

Web Design by Srilanka Muslims Web Team