அட்டாளைச்சேனையில் தேசிய காங்கிரசின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் » Sri Lanka Muslim

அட்டாளைச்சேனையில் தேசிய காங்கிரசின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்

DSC_4908

Contributors
author image

M.J.M.சஜீத்

தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அட்டாளைச்சேனை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும்,  தேர்தல் பிரச்சாரக்கூட்டமும் நேற்று (7)  அட்டாளைச்சேனை பிரதான வீதியில் மக்கீன் ஜே.பி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இக்கூட்டத்தின் போது அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக தேசிய காங்கிரசின் குதிரைச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதன்போது பெருந்திரலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_4744 DSC_4899 DSC_4908 DSC_4945 DSC_4965

Web Design by The Design Lanka