அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வயோதிபர் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து மரணம் » Sri Lanka Muslim

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வயோதிபர் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து மரணம்

janaza

Contributors
author image

A.B.M.Azhar - Journalist

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

ஆதம் லெப்பை சாஹுல் ஹமீத் (70வயது ) என்பவரே மேற்படி சம்பவத்தில் உயிர் இழந்தவராவார் .
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது .. 

மருதமுனையை பிறப்பிடமாகவும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான இவர் இன்று நிந்தவூரில் வழமை போன்று தனது தச்சுத்தொழிலில் ஈடுபடிருந்த சமயம் பிற்பகல் 4 மணியளவில் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by The Design Lanka