அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலத்தில் கௌரவிப்பு விழா » Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலத்தில் கௌரவிப்பு விழா

arham.JPG2.JPG3

Contributors
author image

M.J.M.சஜீத்

சப்னி அஹமட் , எம்.ஜே.எம்.சஜீத்


அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அர்ஹமின் தடம்பதித்தோர் கௌரவிப்பு விழா நேற்று (6) பாடசாலை அதிபர் ஏ.எம்.இத்ரீஸ் தலைமையில் பாடசாலை திறந்த வெளியரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அல்-அர்ஹம் வித்தியாலத்தில் இவ்வருடம் தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கடந்த வருடம் க.பொ.த சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் உட்பட கற்பித்த ஆசிரியர்களும் இந்நிகழ்வின் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் ஏ.எல்.எம்.நசீர் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ.எம்.றஹ்மதுல்லா கௌரவ அதிதியாகவும், அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சீ.கஸ்ஸாலி விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பாடசாலை மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் முயற்சியினால் அல்-அர்ஹம் வித்தியாலயத்திற்கு கிடைக்கப்பெற்ற கணணிகளும் இதன்போது பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

arham arham.JPG2 arham.JPG2.JPG3 arham.JPG2.JPG3.jpeg33 arham.JPG2.JPG3.jpeg78 arham.JPG2.JPG3.jpeg456 arham.JPG2.JPG3.jpeg45666

Web Design by The Design Lanka