அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு (21) புதன் கிழமை » Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு (21) புதன் கிழமை

IFTHAR

Contributors
author image

S.Ashraff Khan

அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு எதிர்வரும் (21) புதன் கிழமை பி.ப. 4.30 மணிக்கு அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் உலமாக்கள். அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிகள், அரச உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அல்-இபாதா கலாசார மன்றம் வருடா வருடம் ரமழான் மாதம் ஹதீஸ் மஜ்லிஸ் மற்றும் இப்தார் நிகழ்வுகளையும் நடாத்தி வருவதுடன் பல்வேறு சமூகப் பணிகளையும் அட்டாளைச் சேனைப் பிரதேசத்தில் மேற்கொண்டு வருகிறது. மேற்படி கலாசார மன்றம் தொடர்ச்சியாக 6 வருடகாலமாக இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka