அட்டாளைச்சேனை ஐ.எல்.முஹம்மது ரிபாயி ஆசிரியர் இன்று காலமானார் » Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை ஐ.எல்.முஹம்மது ரிபாயி ஆசிரியர் இன்று காலமானார்

rifai

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எம்.எச்.எம்.கியாஸ்)


ஐ.எல்.முஹம்மது ரிபாயி (57) அவர்கள் இன்று காலை வீட்டில் வைத்து காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அட்டாளைச்சேனை 01 ம் குறிச்சி, ஷரீப் ஹாஜியார் வீதியை சேர்ந்த இவர் ஓய்வு பெற்ற முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் இப்றாலெப்பை அவர்களின் மூத்த புதல்வரும், ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர் அப்துல் ஹக் அவர்களின் மருமகனுமாவார்.

எல்லோருடனும் அன்பாகப் பழகும் இவர் சமய விடயங்கள்,மற்றும் சமூகம் தொடர்பான நடவடிக்கைகளில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டு வந்தவர். இவரின் ஜனாஸா தற்போது இவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு இஸா தொழுகையின் பின்னர் அட்டாளைச்சேனை பொது மையவாடியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலம் சென்ற ஐ.எல்.முஹம்மது ரிபாயி திருமணம் முடித்து ஒரு பெண் பிள்ளையின் தந்தையுமாவார். பல்கலைக்கழக பட்டதாரியான இவர் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார். அத்தோடுஅதிபர் தரம் ஒன்றிற்கு நியமிக்கப்படுவதற்கான நேர்முகப்பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.எல்.முஹம்மது ரிபாயி அவர்களுக்கு இரண்டு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உள்ளனர்.

ஊடகத்துறையோடு மிக நெருங்கிய தொடர்பைக் கொண்ட இவர் ஆரம்ப காலங்களில் அட்டாளைச்சேனை பிரதேச செய்திகளை பத்திரிகைகளுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார். அட்டாளைச்சேனை பொது நூலகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பல வருடங்கள் இருந்துள்ள ஐ.எல்.முஹம்மது ரிபாயி நூலகத்தின் வளர்ச்சிக்கும் தன்னால் இயன்ற பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

முதல்தர செய்தி இணையத்தளமான களம் பெஸ்ட் இணையத்தளத்தின் ஆசிரியபீட ஆலோசகராகவும் செயற்பட்டு வரும் இவர் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆரம்பகால அங்கத்தவர்களில் ஒருவருமாவார்.

இம்றானியா கலாசார நிலையம் மற்றும் பள்ளிவாயலின் தோற்றத்திற்கு முழுமையான பங்காற்றியவர் ஐ.எல்.முஹம்மது ரிபாயி என்றால் அது மிகையாகாது.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மர்ஹூம் மசூர் சின்னலெப்பை அவர்களின் சகோதரியின் மருமகனுமாவார்.

மார்க்கப்பணியும், சமூகப்பணியும் செய்து வந்த ஐ.எல்.முஹம்மது ரிபாயி அவர்களின் இழப்பு எமது பிராந்தியத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது இழப்பில் துயறுற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளை, குடும்பத்தினருக்கு இதை தாங்கும் பக்குவத்தை ஏற்படுத்துவதுடன் அவரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

Web Design by The Design Lanka