அட்டாளைச்சேனை கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இரத்துச் செய்யப்பட்ட ஆசிரியர்கள் » Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இரத்துச் செய்யப்பட்ட ஆசிரியர்கள்

transfer

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(உண்மையாளன்)


அட்டாளைச்சேனை கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இரத்துச் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பிரச்சனைக்கு விரைவாக தீர்வு பெற்றுத்தருவதாக புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதி! தீர்வு கிடைக்காவடின் போராட்டம் ஒன்றினை தவிர்க்க முடியாது என பெற்றோர்கள் எச்சரிக்கை!

அட்டாளைச்சேனை கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு ரத்துச் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பிரச்சனைக்கு விரைவாக தீர்வு பெற்றுத்தருவதாக அக்கரைப்பற்று புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளதாகவும், தீர்வு கிடைக்காவிடின் இப்பிரதேசத்தில் பெரும் போராட்டம் ஒன்றினை தவிர்க்க முடியாது என பெற்றோர்கள் எச்சரிக்iகை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தினை பொறுத்தவரையில் சுமார் 03 வருடங்களுக்கு மேலாக ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் பற்றாக் குறை காணப்படுகின்றது. இதனை நிவர்;த்தி செய்யுமுகமாக ஏற்கனவே கலந்துரையாடப்பட்டு உறுதி வழங்கப்பட்டதற்கமைவாக பொத்துவில் கோட்டத்தில் 05 வருடங்களை பூர்த்தி செய்த ஆசிரியர்களை அட்டாளைச்சேனை கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக புதியதாக நியமிக்கப்பட்ட அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தனது கடமையினை பொறுப்பேற்ற கையோடு இந்த இடமாற்றங்களை ரத்துச் செய்துள்ளதாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எழுத்த மூலமாக அறிவிக்கப்பட்டதனை அறிந்த அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட பாடசாலைகளின் சமூகம் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஆரம்பப் பிரிவு மற்றும் தேவையான ஏனைய ஆசிரிர்கள் நியமனம் தொடர்பில் அட்டாளைச்சேனை கோட்டப் பாடசலைகள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து பெற்றோர்கள் எதிரான போராட்டத்தினை மேற்கொள்ளவிருந்த சந்தர்ப்பத்திலே அட்டாளைச்சேனை அபிருத்திச் சங்கம் எனும் உயரதிகாரிகளைக் கொண்ட இவ் சமூக அமைப்பு இவ்விடயத்தினை கருத்தில் கொண்டு அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அதிகாரி உட்பட அட்டாளைச்சேனை கோட்ட பாடசலைகளின் அதிபர்கள், பாடசலை அபிவிருத்திக் குழுக்களின் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களை அழைத்து இது தொடர்பான போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், சுமுகமான முறையில் வலயக்கல்விப் பணிப்பாளருடன் பேசி தீர்வினை பெற்றுக் கொள்வோம் என ஆலோசனைகளை முன் வைத்ததாகவும், அதனை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கூட்டமானது அட்டாளைச்சேனை சந்தையில் அமைந்துள்ள மர்ஹும் மசூர் சின்னலெப்பை ஞாபகர்த்த மண்டபத்தில் அட்டாளைச்சேனை அபிவிருத்திச் சங்கத்தின் உப-தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எல்.ஏ.றஷிட் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் வருகை தந்து பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களின் கருத்தினை கேட்டதன் பின்னர், தான் புதியதாக கடமையினை பாரமெடுத்துள்ளேன். நான் திட்டமிட்டு இந்த இடமாற்றத்தினை செய்துள்ளதாக இங்கு கவலையுடன் தெரிவித்தீர்கள். ஆனால் உண்மையிலே இதனை நான் செய்யவில்லை. எனது உயரதிகாரியான கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் 2017.10.04 ஆம் திகதிய தொலைபேசி அழைப்பின் பரகாரம் இந்த ஆசிரியர்களின் இடமாற்றத்தினை இரத்துச் செய்தேன். என்னை யாரும் கோபிக்க வேண்டாம். இந்த இடமாற்றத்தினை உடனடியாக செய்ய வேண்டிய எந்தத் தேவையும் எனக்கில்லை. மேலாதிகாரியின் அறிவுறுத்தலை நான் நடமுறைப்படுத்தினேன் என்று கூறிவிட்டு, இது தொடர்பான தெளிவான நிலைமையினை மாகாண கல்விப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தி சாதகமான நடவடிக்கைகளை செய்து கூடிய விரைவில் ஒரு முடிவினை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், இவ்வாரான சாதகமான முடிவினை தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் நன்றி கூறியதாகவும் தெரிவிக்கப்படும் இவ் வேளையில் இது வரைக்கும் எதுவிதமான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக அட்டாளைச்சேனை கோட்டப் பாடசலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் அங்குள்ள மாணவர்களின் கல்வி மட்டம் குறைவாகவுள்ளதாக சுற்றிக் காட்டப்படுகிறது. உதாரணமாக இவ் வருட ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் தொகை குறைந்துள்ளது. இதற்கு காரணம் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் பற்றாக்குறையே எனக் கூறப்படுகின்றது.

இருந்தாலும் இந்தப் பிரச்சனையினை போராட்ட வடிவுக்கு கொண்டு செல்லாமல் சாதகமான, நீண்ட காலமாக நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிப்பதும், இரத்துச் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்ற இரத்தினை உடனடியாக தொலைபேசி மூலமாக இரத்துச் செய்வதும் பாரிய வெற்றி அளிக்கும் . இவ்வாரான சுமூகமான, ஆரோக்கியமான முடிவினை அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட பாடசாலைகளின் சமூகம் எதிர் பார்த்துள்ளதாகவும் கல்வியாளர் ஒருவர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka