அட்டாளைச்சேனை கோணாவத்தை வேலைத்திட்ட முன்னேற்றங்களை அமைச்சர் உதுமாலெப்பை பார்வையிட்டார் - Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை கோணாவத்தை வேலைத்திட்ட முன்னேற்றங்களை அமைச்சர் உதுமாலெப்பை பார்வையிட்டார்

Contributors

-எம்.வை.அமீர்- 
கடந்த 2013-10-21 ம் திகதி அனுஷ்ட்டிக்கபட்ட நீர்பாசன வாரத்தில் துவக்கி வைக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் ஒன்றான கோணாவத்தையை சுத்தப்படுத்தி,அகலமாக்கி இருமருங்கிலும் வீதிகள் அமைத்து மின்சார வசதிகள் செய்து மொத்தத்தில் கோணாவத்தையை நவீன மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் வேலைகள் துவக்கி வைக்கப்பட்டு 40 நாட்கள் நிறைவு பெறும் இன்றைய தினத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசனம்,வீடமைப்பும் நிர்மாணமும்,கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரின் கனவுகளில் ஒன்றான கோணாவத்தையை நவீனப்படுத்தும் திட்டத்தினை நேரில் சென்று பார்வையிட்டதுடன் வேலையை துரிதப்படுத்துமுகமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரைகளையும் வழங்கினார்.

அமைச்சருடன் அமைச்சரின் ஆலோசகரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.ஹனீஸ் மற்றும் அமைச்சு அதிகாரிகளும் இந்த வேலைத்திட்டத்துக்கு அமைச்சருக்கு பக்க துணையாக இருக்கும் கோணாவத்தை அபிவிருத்தி குழுவினரும், பேரும் திரளான மக்களும் காணப்பட்டனர்.

வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக அமைச்சரிடம் வினவிய போது தனது கனவுகளில் ஒன்றான இந்த கோணாவத்தையை நவீனப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 40 நாட்கள் பூர்த்தியாகும் இன்றைய தினத்தில் சுமார் ஒன்றரை கிலோமீட்டருக்கு மேல் துரத்த்திற்கு வேலைகள் நகர்ந்துள்ளதாகவும் இதன் ஊடாக ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பயிர் செய்கை பண்ணக்கூடிய அளவுக்கு மாறி வருவதாகவும் கோணாவத்தையை அண்டிய பிரதேச காணிகளின் பொறுமதி அதிகரித்துள்ளதாகவும் முதளைகளின் குடியிருப்பாக காணப்பட்ட கோணாவத்தை மீனவர்கள் சிறந்த மீன்களை பிடித்து தங்களது ஜீவானனோபாயத்தை ஓட்டிச்செல்லக்கூடிய இடமாக மாறிவருவதாகவும் எதிர்காலத்தில் இந்த இடம் உள்ளூர் வாசிகளுக்கும் ஏன் வெளிநாட்டவர்களுக்கும் பொழுது போக்கக்கூடிய இடமாக மாறும் என்றும் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்துக்கு பிரதேச வாசிகளின் ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கிறது என வினவிய போது மக்கள் கோணாவத்தையை நவீனப்படுத்தப்படுவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகவும் இதன்காரணமாக மக்களும் தாங்களும் நெகிழ்வுப்போக்குடன் செயற்படுவதாகவும் ஒரு சிலரைத்தவிர அநேகர் கட்சி பேதங்களை மறைந்து ஒத்துழைப்பதாகவும் குறிப்பிட்டார்.

DSC_0704

DSC_0659

DSC_0688

DSC_0694

Web Design by Srilanka Muslims Web Team