அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதுமுக ஆசிரியர் பயிலுனர்களின் வரவேற்பு நிகழ்வு - Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதுமுக ஆசிரியர் பயிலுனர்களின் வரவேற்பு நிகழ்வு

Contributors
author image

ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் தேசிய டிப்ளோமா (2014-2016) ஆம் கல்வியாண்டுக்கான புதுமுக ஆசிரியர பயிலுனர்களின் வரவேற்பு நிகழ்வு நேற்று (2014.09.02) கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வு கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. சர்வமத சமய அனுஸ்டானங்களை  தொடர்ந்து தேசிய கீதம், கல்லூரி கீதம் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர் தினேஷ் இனால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது, அடுத்து விரிவுரையாளர்களை அறிமுகம் மற்றும் புதிய ஆசிரிய பயிலுனர்கள் நடந்து கொள்ள வேண்டிய ஓழுங்குகள், சட்டதிட்டங்கள் தொடர்பான உரையினை கல்விக்குறிய உப பீடாதிபதி எம் பீ.ஏ. அஸீஸ் இனால் நிகழ்த்தப்பட்டது. அவரை தொடர்ந்து உப பீடாதிபதியான எம்.எச்.எம். மன்சூர், பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் ஆகியோர் உரைநிகழ்தினார்கள்.

 

இவ்விழாவில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பதிவாளர், இரண்டாம் வருட ஆசிரியர பயிலுனர்கள், புதிதாக அனுமதி பெற்ற 130 ஆசிரிய பயிலுனர்கள் தத்தம் பெற்றோருடனும், குடும்பத்துடனும் மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

 

0

 

01

 

02

Web Design by Srilanka Muslims Web Team