அட்டாளைச்சேனை பிரதேச அனர்த்த முகாமைத்துவ பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பு உயர்மட்டக் கூட்டம் - Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை பிரதேச அனர்த்த முகாமைத்துவ பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பு உயர்மட்டக் கூட்டம்

Contributors
author image

சலீம் றமீஸ்

அட்டாளைச்சேனை பிரதேச அனர்த்த முகாமைத்துவ பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பு உயர்மட்டக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.

 

பருவமழை மற்றும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்படுகின்ற மக்கள் மற்றும் விவசாய காணிகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் அத்தோடு டெங்கு நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்ற வடிகான்கள் துப்புரவு செய்தல் அத்துடன் பராமரிப்பில்லாமல் காணப்படும் வெற்றுக் காணிகளை துப்புரவு செய்தல் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. தீர்மாணங்களும் மேற்கொள்ளப்பட்டது.

 

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், பிரதேச சபை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், நீர்ப்பாசன திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவைகள் இணைந்து இத்;திட்டங்களை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.ஐ.எம்.இஸட்.இப்றாஹீம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயீல், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எம்.சியாத், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஐ.எம்.மனாப், யாசீர் ஐமன், திவிநெகும திணைக்களத்தின் அட்டாளைச்சேனை தலைமைபீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம், திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஹமீட், உட்பட அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

50

 

51

 

52

 

53

 

54

Web Design by Srilanka Muslims Web Team