அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்தினை தேசிய காங்கிரஸிடம் வழங்கவும். » Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்தினை தேசிய காங்கிரஸிடம் வழங்கவும்.

A32CE8FF-79C9-464F-99F6-39EF96AC28FB

Contributors
author image

M.J.M.சஜீத்

நமது சமூகத்தின் அடையாளத்திற்காகவும், அட்;டாளைச்சேனை பிரதேச மக்களின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் அதிகாரத்தினை தேசிய காங்கிரஸிடம் மக்கள் வழங்க வேண்டும் என தேசிய காங்கிரஸின் பிரசாரக் கூட்டம் தொழில் அதிபர் ஏ.எல்.எம்.மக்கீன் ஜே.பி தலைமையில் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நடைபெற்ற போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்….

தேசிய காங்கிரஸ் கட்சியினால் உச்ச பயன் அடைந்துள்ள நமது அட்டாளைச்சேனை பிரதேசம் நீண்ட காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவினை வழங்கி ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மக்கள் ஆணையினை வழங்கி நமது பிரதேச அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து எமது மக்களின் எதிர்கால நலனுக்கு சிறந்த பணிகளை புரிவதற்கு சந்தர்பத்தினை வழங்க வேண்டும்.

நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வீழ்ச்சியினை புரிந்து கொள்ள நமது மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸிக்கு பாறிய பின்னடைவு ஏற்படும்.

கடந்த காலங்களில் மக்களுக்காக அர்ப்பணிப்போடு பணிபுரிந்த வேட்பாளர்களை அடையாளம் கண்டு பிரதேச சபை வேட்பாளர்களாக முன் நிறுத்தியுள்ளோம். இறை நம்பிக்கையுடையவர்களுக்கும், மக்களுக்கு அர்ப்பணிப்போடு பணிகள் புரிவர்களுக்கும் வாக்களித்து தங்களின் பிரதி நிதிகளை தெரிவு செய்ய வேண்டும்.

இல்லையெனில் இறை நம்பிக்கையற்றவரும், சமூக நலன் அற்றவர்களு;ம நமது மக்களை ஆள்வதற்கு வரும் நிலை ஏற்;படும் எனத் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka