அட்டாளைச்சேனை றிஸ்லியின் கவிதை நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை றிஸ்லியின் கவிதை நூல் வெளியீட்டு விழா

bo

Contributors
author image

Safnee Ahamed

அட்டாளைச்சேனையை சேர்ந்த கவிஞர், அறிவிப்பாளர் றிஸ்லி சம்சாட் எழுதிய ”முகவரி” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 15.10.2017 அன்று அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் மண்டபத்தில் மாலை வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றவுள்ளது. இதன் பிரகாரம் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ பைசால் காசீம் (பா.உ)
சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளதுடன். கௌரவ அதிதிகளாக
• ஏ.எல்.எம்.நசீர் (முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்)
•  எம்.எஸ்.உதுமாலெப்பை , – முன்னாள் எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் அமைச்சர் – கிழக்கு மாகாணசபை.
•  ஏ.எல்.தவம் (முன்னாள் மாகாண சபை உறுப்பினர் – கிழக்கு மாகாணம்)
•   அன்வர் (முன்னாள் மாகாண சபை உறுப்பினர் – கிழக்கு மாகாணம்)
•  சிப்லி பாறுக் (பொறியியலாளர்) – (முன்னாள் மாகாண சபை உறுப்பினர் – கிழக்கு மாகாணம்)
• திரு. கதிர்காமநாதன் ஐங்கரன் – நிறுவுனர் படைப்பாளிகள் உலகம் கனடா.

உள்ளிட்டோர்களுடன் பல முக்கியஸ்தர்கள், இலக்கிய வாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

முஸ்லிம் இளைஞர்கள் சமூக அமைப்பு – ஸ்ரீலங்கா.
தொடர்புகள் : 0712085634,

bo

Web Design by The Design Lanka