அட்டாளைச் சேனை பதில் செயலாளர் விவகாரம்: இது முதலமைச்சரின் செயலாளரின் கவனத்திற்கு! » Sri Lanka Muslim

அட்டாளைச் சேனை பதில் செயலாளர் விவகாரம்: இது முதலமைச்சரின் செயலாளரின் கவனத்திற்கு!

addalai

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்.சி.ஹிம்றாஸ்)


கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளராக பதவி வகிப்பவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். ஆனால் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு நிரந்தரமான செயலாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை.

பொத்துவில் பிரதேச சபையின் செயலாளராகப் பதவி வகிக்கும் அதிகாரி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பதில் செயலாளராக கடமையாற்றுகின்றார். இவர் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பதில் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் பக்கச்சார்பாகவே நடந்து கொள்வதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ள அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் மண் போடுவதில் மோசடிகள் இடம்பெற்று பின்னர் அது கண்டு பிடிக்கப்பட்டு மைதானத்தில் போடப்பட்டிருந்த பல டிப்பர் கிறவல் மண் லோடுகள் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தது.

உரிய முறையில் விண்ணப்பங்கள் கோரப்படாதும், அம்பாரை உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் அனுமதி கிடைப்பதற்கு முன்னராகவே பொது மைதானத்தில் 20 இலட்சம் ரூபாய்க்குரிய கிறவல் மண் போடப்பட்டிருந்தது. இது தொடர்பில் இணையங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பொது நூலகங்களின் நூலக உதவியாளர்களுக்கு பக்கச்சார்பாக இடமாற்றங்களை வழங்கினார். இதனால் வாசகர்கள் பதில் செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இது இலங்கையின் முன்னணி ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருந்தது.

அதேபோன்று அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பல இடங்களில் மக்கள் பிரயாணம் செய்ய முடியாத நிலையில் பல பாதைகள் காணப்பட்ட போதிலும் அதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுடன், வெள்ள நீரை அகற்றுவதற்கான செயற்பாடுகளில் சரியான திட்டங்களை மேற்கொள்வதிலிருந்து ஒதுங்கியுள்ளார்.

பிரதேச சபையில் கடமை செய்து வரும் தற்காலிக மற்றும் பதிலீட்டுக் கடமை செய்யும் உழியர்களுக்கு 12 நாட்களாக வேலை செய்யும் நாட்குறைப்பைச் செய்துள்ளார். சில ஊழியர்களுக்கு மட்டும் 26 நாட்கள் வேலை செய்வதற்கு அனுமதியளித்து மிகப்பெரிய அநீயாயத்தையும், பக்கச்சார்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரதேச சபையின் நூலகங்களில் வீதித் தொழிகளையும், சுகாதாரத் தொழிகளையும் நியமித்து நூலகங்களின் சிறந்த செயற்பாட்டிற்கு தடையை ஏற்படுத்தியுள்ளார். தற்காலிக நூலக உதவியாளர்களாக கடமை செய்து வந்தவர்களுக்கு வேலை நாட்களை 12 நாட்களாகக் குறைத்து அவர்களை தொழிலை விட்டுப் போவதற்கான அநீயாயத்தை செய்து குறிப்பிட் ஊழியர்களின் வாழ்வாதாரத்திலும் கைவைத்துள்ளார்.

வீதித் தொழிலாளியாக நியமனம் உள்ளவர்களுக்கு பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளருக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்து அரசாங்கத்தின் சட்டதிட்டங்களையே மாற்றியமைத்துள்ளார்.(இதில் இன்னம் பல விடயங்கள் உள்ளது உரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவோம்.)

இவ்வாறு இன்னும் பல செயற்பாடுகளிலும் பக்கச்சார்பாகவும், அநீதியாகவும் செயற்படும் பதில் செயலாளர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது பாராமுகமாகவே முதலமைச்சரின் செயலாளர் இருந்து வருகின்றார்.

தனது சொந்த இடமான அட்டாளைச்சேனை பிரதேச சபையில் இவ்வளவு அதீகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றும் நடவடிக்கை எடுக்காதது கல்வியலாளர்கள் மத்தியில் மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதாக்குறைக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு நிரந்தரமான செயலாளர் ஒருவரை நிமியக்கக்கூட கையறு நிலையில் முதலமைச்சரின் செயலாளர் இருப்பதுதான் வேடிக்கை.

ஒரு பிரதேசத்தைச் சேர்ந்தவர் அரசாங்க உயர்பதவியில் அமருகின்றபோது அந்த மண் பெருமைப்படும். ஆனால் சிலர் அவ்வாறான பதவிகளில் அமத்தப்படுகின்றபோது அந்த மண் கண்டு கொள்வதே இல்லை. அடிமட்ட தொழிலாளியின் வாழ்வாதாரத்திற்கான தொழிலை பறிப்பதற்கே தனது உயர்பதவியை பயன்படுத்துகின்றார்கள்.

Web Design by The Design Lanka