“அணுஉலையால் இலங்கைக்கும் ஆபத்து?” - Sri Lanka Muslim
Contributors

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் தகவலை புறக்கணித்துவிட முடியாது என்று இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த தகவல்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தியா உரிய பதிலை தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஃபுகுஷிமா விபத்தைப் போல கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் இலங்கைக்கும் ஆபத்து ஏற்படும் என்பதை மறுக்க முடியாது என்றும் சம்பிக ரணவக கூறியுள்ளார்.

கூடங்குளம் அணு உலையில் கசிவு ஏற்பட்டதாக வெளியானத் தகவலை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அணு உலைக்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இலங்கைக்கு அருகில் இருக்கும் அணு உலைகளின் பாதுகாப்பில் இலங்கை அரசு அதிக அக்கறை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team