அணுக்கரு இணைப்பில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் முன்னேற்றம்! - Sri Lanka Muslim

அணுக்கரு இணைப்பில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் முன்னேற்றம்!

Contributors

Advancements-of-American-Scientists-in-the-research-of-Nuclear-fission-

அணுக்கரு இணைப்பு தொடர்பான ஆராய்ச்சியில் மிக முக்கிய முன்னேற்றத்தை கண்டுள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

கலிபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உலகில் அதிக சக்தி வாய்ந்த 192 லேசர் ஒளிக்கற்றைகளை சிறிய அளவிலான ஹைட்ரஜன் அணுக்கள் மீது செலுத்தினர்.

இதன் மூலம் வெப்பமாக்கப்பட்டு நிகழ்ந்த அணுக்கரு இணைப்பில் வெளியான சக்தியானது, செலுத்தப்பட்ட சக்தியை விட அதிகமாக இருந்தது. இதுவரை அணுக்கரு இணைப்பிற்காக நடத்தப்பட்ட சோதனைகளில் வெளியான சக்தியானது செலுத்தும் சக்தியை விட குறைவாகவே இருந்தது.

இதற்கு காரணம் செலுத்தப்படும் வெப்பத்தின் அளவு முழுமையாக எரிபொருளிற்கு எடுத்து செல்லப்படுவதில் ஏற்படும் குறைபாடே இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. அந்த வகையில் தற்போது ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Web Design by Srilanka Muslims Web Team