அதிகளவான சுற்றுலாப் பிரயாணிகளால் நிரம்பி வழியும் நுவரெலியா..! - Sri Lanka Muslim

அதிகளவான சுற்றுலாப் பிரயாணிகளால் நிரம்பி வழியும் நுவரெலியா..!

Contributors

புத்தாண்டு மற்றும் வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியாவில் எதிர்பாராத அளவு சுற்றுலா பயணிகள் வருகைத்தந்துள்ளனர்.

நுவரெலியாவிலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களில் சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிவதாக நுவரெலியா மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சுற்றுலா பயணிகள் நுவரெலியாவில் புத்தாண்டை கொண்டாடுவற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் நுவரெலியாவில் உள்ளனர். நுவரெலியா வரும் மக்களை தடுக்க முடியாது.

மக்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிகள் உட்பட சில விடயங்கள் இம்முறை தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் குப்பைகளை உரிய முறையில் கொட்டுமாறும் சூழலை பாதுகாக்குமாறும் பொது மக்களிடம் மேயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team