அதிகாரமிக்க சபையின் அவசியம் » Sri Lanka Muslim

அதிகாரமிக்க சபையின் அவசியம்

politic

Contributors
author image

Fahmy Mohideen

சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் ஒழுங்கமைப்பை முன்னெடுப்பதிலும் வழிநடாத்துவதிலும் பொதுநிறுவனங்கள் முக்கியம் பெறுகிறது.குறிப்பாக சிறுபான்மையினராக வாழ்கின்ற நாட்டில் அரசியலுக்கு அப்பால் கலாச்சார விழுமியங்களையும் தனித்துவமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில் அகில இலங்கை ஐம்மியத்துல் உலமாசபை காத்தாரமான பங்களிப்பை வழங்கிவருகறது.
குறிப்பாக அரசியலுக்கு அப்பால் நின்று செயற்படும் இந்த அமைப்பு ஒருமைப்பாட்டுடன் இலங்கைக்குள் வாழ்வதற்கும் முஸ்லீம்களின் மதம்சாரந்த விடயங்களில் அதிகாரபூர்வமான அமைப்பாகவும் செயற்படுகிறது.

இருந்தாலும் கடந்த மஹிந்த ஆட்சியில் இன் செயற்பாடுகள் தளம்பல் நிலையையும் அரசியல்சாயத்தையும் பூசிக்கொண்டது துரடிஸ்டவசமாகும்.குறிப்பாக தௌஹீத் அமைப்பு போன்ற இதர இஸ்லாமிய அமைப்புகளின் வளர்ச்சி , இலங்கைக்கு சார்பாக ஜ.நாடுகள் சபைக்கு சென்றமை ,பிறை தீர்மானம் மற்றும் ஹலால் பிரச்சனையில் கையாண்ட அணுகுமுறைகளால் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்த நிலையில் நாட்டின் பல்வேறு முஸ்லீம் பிரதேசங்களில் உருவான சூறாசபை மற்றும் இதரஅமைப்புகள் இந்த பலமிக்க ACJU சபையின் தனித்துவமிக்க செல்வாக்கை கேள்விக்குறியாக்கியுளளது.

கிண்ணியாவிலும் இத்தகைய சபைகள் செயற்பட்டாலும அன செயற்பாடுகள்பாடுகள் மறுசீரமைக்கப்பட வேண்டியது காலத்தின தேவையாக உள்ளது.முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவும்,அரசியல் ஆரோக்கியமற்றதாகவும் உள்ள நமது ஊரில் இந்தசபையின் கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியமே.

கடந்தகாலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்கள்,கிரீஸ்மனிதன்,வைத்தியசாலைமற்றும் டெங்குப் பிரச்சனை,ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றம் மற்றும் எல்லை நிர்ணயம்,காணிப் பிரச்சனைகளில் நமது ஊரில் இவர்களின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது.இருந்தும் இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

1-சமூகத்தில் ஆர்வமுடைய சிந்தனையாளர்கள்,பல்துறைசார் அறிவுமான்கள் மற்றும் இளைஞர்கள் இந்த சபைக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

2-இந்த சபையின் செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும்.குறிப்பாக இதன் செயற்பாட்டாளர்கள் அரசியலில் தொடர்புபடாமல் இருக்க வேண்டும்
3-நடுநிலையானதும்,சுயாதீனமானதுமான செயற்பாடுகளால் மக்களின் நம்பிக்கை மற்றும் பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவேண்டும்.

4-தமது செயற்பாடுகளுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் நிதிஉதவிகளை நிரந்தரமாகப் பெறுவதற்கான ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும்.
5-வெறுமனே அறிக்கை விடுவதும்,கூடிக்கலைவதுமாக இல்லாமல் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் சபையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.

6-முஸ்லீம்கள் அதிகமாக வாழ்கின்ற நமது பிரதேசத்தில் அதிகாரமும்,தனித்துவமும் உள்ள சபையாக மாற்றம் பெறவேண்டும்.குறிப்பாக கலாச்சாரம்,பொருளாதாரம்,கல்வி ,சுகாதாரம் மற்றும் இதர விடயங்களில் சமூகத்தின் தனித்துவமான தீர்மானமுள்ள சக்தியாக விளங்க வேண்டும்.

7-அரசியலை வெறுமனே தேர்தலுடன் மட்டும் மட்டுப்படுத்தி,மற்றைய காலங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முகாமைத்துவமும் முறைப்படுத்தலும் இந்த சபையினாலே முன்னெடுக்கப்பட வேண்டும்.

8-இந்த சபையின் பிரதிநிதிகள் மக்களின் வெளிப்படையான தேர்வு மூலம் தேரந்தெடுக்கப்பட வேண்டும்.கூடியது 3/4 வருடத்திற்கு ஒருமுறை தெறிவுகள் இடம்பெற வேண்டும்.
9-இதன் உறுப்பினர்கள் வாக்களிப்பதைத் தவிர வேறுஎந்த அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் விலகி இருப்பதை நிச்சயப்படுத்தும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

10-நமது கலாச்சாரம்,அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் வெளியார் மற்றும் அந்நியரின் தலையீடுகளை முற்றாக நிறுத்தும் வகையில் கட்டமைப்பு பலமாக அமைக்ப்பட வேண்டும்.

இதனை விட இன்னும் பல்வேறு விடயங்களை உள்வாங்கக்கூடிய வகையில் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.அந்தக் கலந்துறையாடல்களின் மூலம் பொதுவானதும் விடயங்களை நிகழ்ச்சி நிரலாக வரைந்து மக்களின் அங்கீகாரத்துடன் செயற்படுத்தும் உறுப்பினர்களின் தெரிவின் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இன்று நமது ஊரில் தலைவர்களும்,நாட்டாமைகளும் அதிகரித்த வண்ணமே உள்ளது.இது ஆரோக்கியமான சமூகத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஆபத்தாகவே அமையும்.எந்த ஒரு கட்டுப்பாடுடைய தலமைத்துவமோ,வழிகாட்டலோ நம்மிடம் இல்லை.அரசியல்,பிரதேச மற்றும் மதம்சார் கொள்கை ரீதியாக பலதுண்டுகளாக பிரிந்து நிற்கின்றோம்.

பள்ளிவாசல் ஹோட்டல் மற்றும் இறைச்சிக்கடைகளில் மற்றுமே ஒற்றுமையாகவும் சகிப்புத்தன்மையுடனும் செயற்படுகிறோம்.எங்களிடம் ஒருமைப்பாடு மற்றும் தலமைத்துவக் கட்டுப்பாடு அவசியமாகும்.இதனையே எமது மார்க்கம் எமக்கு கற்பிக்கிறது.நாம் தலமைத்துவக் கட்டுப்பாட்டிற்கு வழிநடக்க வரலாற்றில் முறைப்பதுத்தப்பட்ட சமூகம்.இதனை வாழ்நாளில் செயற்பாட்டுடன் ஒன்றிணைக்க வேண்டும்.அதன்மூலம் நமக்கும் நமது பிரதேசத்திற்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் கிடைக்கும்.

ஆகவே சகல வேறுபாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்து ,முஸ்லீம்களாகிய நாம் நமது பிரதேசத்தில் அதிகாரமிக்க சபை ஒன்றை உருவாக்க அல்லது இருக்கின்ற சபையினை பலப்படுத்த கலந்துரையாடலை மேற்கொள்வோம்.இது கடினமானதும் மிகுந்த சவால் நிறைந்ததுமாகும்.இருந்தும் சமூக நோக்குடன் செயற்படுகின்ற பலர் எமது பிரதேசத்தில் உள்ளதால்,இதற்கன ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம்?

Web Design by The Design Lanka