அதிவேகப்பாதையின் அவசியமும் அதன் அபிவிருத்தி வேகமும்! - Sri Lanka Muslim

அதிவேகப்பாதையின் அவசியமும் அதன் அபிவிருத்தி வேகமும்!

Contributors

-நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்-

இலங்கையில் மிக விரிவான பாதை வலையமைப்பொன்று இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவைகள் இற்றைக்கு 50வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டவைகளாக இருக்கின்றன.
அதிகரிக்கும் வாகனங்களின் கொள்ளளவுக்கு வெற்றிகரமாக ஈடுகொடுக்கக்கூடிய நிலையில் அவை இல்லை.அதனால் வளர்ச்சியடைகின்ற போக்குவரத்துத் தேவைகளுக்கு முகங்கொடுப்பதற்கும் பாதை வலையமைப்பு நாட்டின் அபிவிருத்திக்கு இடையூறாக இருப்பதைத் தடுப்பதற்கும் விரிவானதும் வினைத்திறன் மிக்கதுமான பாதை வலையமைப்பொன்றை மேம்படுத்தவேண்டிய அவசியம் உணரப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே கட்டுநாயக்கா-கொழும்பு அதிவேகப்பாதையும் உருவாக்கப்பட்டது.இந்த வீதியின் நீளம் 25.8 கி.மீட்டர்களாகும். இது புதிய களனிப்பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமாகுகின்றது.  கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய வீதியில் இது முடிவடைகின்றது.

இதன் நிர்மாணம் சார்ந்த செலவு 350 மில்லியன் அ.மெரிக்க டொலர்களாகும். .ந்த அதிவேகப்பாதையூடாக மணித்தியாலத்திற்கு 100 கி.மீ வேகம் வரை வாகனங்கள் பயணிக்கலாம். இந்த வீதியைப் பயன்படுத்துவதால் கொழும்புக்கும் கட்டுநாயக்காவுக்கும் இடையில் போக்குவரத்துக்கு எடுக்கும் காலத்தை 20 நிமிடங்கள் வரை குறைக்க முடிந்துள்ளது.வெளிநாடுகளுக்குச் செல்வதற்கென விமான நிலையம் செல்லும் பலரும் இன்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

Highway

இந்த அதிவேக வீதிக்கு 04 பிரதான இடைமாறல் நிலையங்கள் உண்டு.

1. புதிய களணிப் பாலத்திற்கு அருகிலுள்ள இடைமாறல் நிலையம்

2. பேலியகொட இடைமாறல் நிலையம்

3. ஜா-எல இடைமாறல் நிலையம்

4. கட்டுநாயக்கா இடைமாறல் நிலையம்

இதன் நிர்மாணம் சார்ந்த பணிகள் 2009-08-18 ஆரம்பிக்கப்பட்டன. நெடுஞ்சாலைகள்இ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சினதும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினதும் கண்காணிப்பில் சீன நிர்மாணக் கம்பனியினால் வீதி நிர்மாணக் கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் கடல் மணலைப் பரவி நிர்மாணிக்கப்பட்ட ஒரேயொரு அதிவேக வீதி இந்த கொழும்பு – கட்டுநாயக்கா வீதி முக்கியத்துவம் வாய்ந்தது என நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறைக் கருத்திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவள தெரிவித்தார்.
Highway-2

அதே போன்று நவீனத் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி முறையான ஒரு போக்குவரத்துச் சேவையைப் பேணிச்செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு அமைய வீதியில் நிகழக்கூடிய விபத்துக்கள் பற்றி சாரதிகளுக்கு விழிப்பூட்டுவதும் இலத்திரனியல் அறிவித்தல் பலகைகளை நிறுவப்பட்டுள்ளன. அதே போன்று இந்த அதிவேக வீதியின் இரு பக்கங்களிலும் தொலைபேசி முறைமைகளும் நிறுவப்பட்டுள்ளன. இதனால் நாளில் 24 மணித்தியாலமும் தலைமை இயக்க அலுவலகத்துடன் தொடர்புகொள்ளக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

Katu-1

மக்கள் சீனக் குடியரசு அரசாங்கத்தின் 306 மில்லியன் ரூபா நிதியுதவியுடனும்  44மில்லியன் ரூபாஉள்நாட்டு நிதி நிதியுடனும் இப்பாதை நிர்மாணிக்கப்பட்டது.கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக வீதி 2013 – 10 – 27 ஆம் திகதி ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

கட்டுநாயக்காவிலிருந்து ஆமை வேகத்தில் கொழும்பு நகரை வந்தடையும் பொது மக்கள்  பலர் இன்று ஆனந்தமும் ஆறுதலும் அடைகின்றனர்.

இவை எல்லலாவற்றுக்கும் மேலாக பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட பெருமகிழ்ச்சியடைந்ததுடன் பேருவகையும் கொண்டனர்.இவர்கள் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டிச் சென்றனர்.

Katu-2

Katukayake-HE

வட கிழக்கு (கொழும்பு கண்டி) அதிவேகப்பாதை

கருத்திட்டம்  அறிமுகம்

 

உத்தேச வடக்கு – கிழக்கு (கொழும்பு – கண்டி) அதிவேகப்பாதை உத்தேச வெளிச் சுற்றுவட்டப் பாதையின் நுழைவாக இருக்கின்ற மற்றும் தற்பொழுது இருக்கும் கொழும்பு –கண்டி பாதையில் (யு1)  கடவத்தை நகர எல்லையில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அது கட்டுகஸ்தொட்ட – குரநாகல் – புத்தளம் பாதைக்காக (யூ)   ஹேதெனிய பிரதேசத்திலும் கண்டி – யாழ்ப்பாணப் பாதைக்காக (யு9)  கட்டுகஸ்தோட்டையிலும் பிரவேசிக்க வழியேற்படுத்துகிறது.

இந்த அதிவேகப் பாதை 99 கி.மீ. கொண்டுள்ள அதேநேரத்தில் முதற்கட்டத்தின் கீழ் கடவத்தையிலிருந்து அம்பேபுஸ்ஸவிற்கும் இரண்டாவது கட்டம் அம்பேபுஸ்ஸவிலிருந்து கட்டுகஸ்தோட்டைக்கும் அமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டள்ளது.உத்தேச பாதையின் நிர்மாணத்தின் முதல் 25 கி.மீ. பகுதி வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும் பிரதேசத்தின் ஊடாகச் செல்லவிருக்கிறது.

அப்பிரதேசம் 2010ஆம் ஆண்டு மே மாதம் கடுமையான வெள்ளப் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக இம்முதற் பகுதியில் தேவையான பிரதேசங்களுக்கு தூண்கள் மீது அமைக்கப்படும் பாதை முன்மொழியப்பட்டுள்ள அதேநேரத்தில் அதன் ஆரம்ப நீளம் சுமார் 9 கி.மீ. ஆகும்.

Web Design by Srilanka Muslims Web Team