அது எனது காலத்திற்குள் மலர வேண்டும் என நினைக்கின்றேன் - ஆர்.சம்பந்தன் » Sri Lanka Muslim

அது எனது காலத்திற்குள் மலர வேண்டும் என நினைக்கின்றேன் – ஆர்.சம்பந்தன்

q1112

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

எதிா்க்கட்சித் தலைவா் ஆர்.சம்பந்தன் நேற்று(12) மட்டக்குளியவில் உள்ள மிஸ்பா மிசனரியின் 25வது வெள்ளிவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போது –

இந்த நாடு பொருளாதாரத்தில் ஒர் உன்னத நிலையை அடையவேண்டுமென்றால் தேசிய பிரச்சினைக்கு உடன் தீா்வு காணப்படல் வேண்டும்.  இந்த நாடு பல்லினம் வாழும் நாடு.
எமது நாட்டுப் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். ஒருமித்த நாட்டுக்குள் ஏனைய சமுகங்களுக்கும் சமத்துவம் ,சமதானம் மற்றும் சமமாக வாழ ஒர் அரசியல் தீா்வு வேண்டும். அது எனது காலத்திற்குள் மலர வேண்டும் என நினைக்கின்றேன்.

எனது தலைவா் காலம் சென்ற எஸ்.ஜே செல்வநாயகம் ஒரு கிறிஸ்த்தவா்.

அவாின் வழிகாட்டலில் தான் நான் அரசியல் பின்பற்றி வருகின்றேன். அவா் வன்முறையற்ற ஒரு தீா்வை அன்று இந்த சிங்கள அரசிடம் வேண்டி நின்றாா். இந்த நாட்டில் வாழும் சகல தமிழ் பேசும் சமுகமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீா்வை வேண்டி அவா் அகிம்சை வழியிலேயே போராடினாா். அதனை வழங்க மறுத்தலினால் போா்மூண்டது. தற்பொழுது போா் ஓய்ந்துள்ளது.

மீண்டும் வன்முறையில் நாம் நம்பிக்கை வைக்கவில்லை. நிறைய நாம் இழந்து விட்டோம். இந்த நாட்டில் வாழும் தமிழ் முஸ்லிம் கிறிஸ்த்துவ பௌத்த மக்கள் அமைதியாகவும் சகல உரிமைகளுடன் வாழக்கூடிய தீா்வினை ஏற்படும் என எனக்கு நம்பிக்கை உண்டு.என ஆர் சம்பந்தன் அங்கு உரையாற்றினாா்.

இந் நிகழ்வு மிஸபா மிசனரியின் போதகா் சங்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் அமைச்சா் மனோ கனேசன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவா செல்வம் அடைக்கலநாதன் ஆகியோறும் கலந்து கொண்டனா்.

q112 q1112 q1232 q12324

Web Design by The Design Lanka