அநாகரிகமான முறையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைது இடம்பெற்றுள்ளது : இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான்..! - Sri Lanka Muslim

அநாகரிகமான முறையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைது இடம்பெற்றுள்ளது : இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான்..!

Contributors

இன்று அதிகாலை நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கைது இந்த நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது.நாட்டில் இடம்பெறுகின்ற அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அலையை திசை திருப்பும் பொருட்டே இந்த கைது இடம்பெற்றுள்ளது என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கைதின் பின்னர் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்ற அடிப்படையிலான விசாரணைக்காவே கைது செய்யப்பட்டார் என பொலிஸ் அறிவித்துள்ளது. ஆனால் ஏற்கனவே அவருக்கும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கும் எந்தவித தொடர்புமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் செய்யாத குற்றத்திற்காக கைது செய்து இருப்பது நீதியை கேள்விக்குட்படுத்தியுள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டுமானால் பாராளுமன்றத்திற்கோ அல்லது சபாநாயகருக்கோ முன் அறிவித்தல் கொடுக்க வேண்டும். ஆனால் எந்த வித அறிவித்தலுமில்லாமல் இவ்வாறு கைது செய்வது சட்ட மீறலும், பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலுமாகும்.

சீனி, மண் கொள்ளை, கேஸ்சிலின்டர் விலை அதிகரிப்பு, , துறைமுக நகர எதிர்ப்பு, அளவுக்கதிக பண அச்சடிப்பு, வாழ்வாதாரச் சுமைகள், பாராளுமன்ற தொடர் நெருக்குவாரங்கள், கொரோனா அலைகள், மனித உரிமை விசாரணைகள், என சிங்கள சமுகத்தின் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பலைகளை மறைக்கவே தலைவர் றிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். புனித ரமழான் காலத்தில் இவ்வாறு முஸ்லிம்கள் மீது விழும் ஒவ்வோர் அடிகளுக்கும், பாவம் செய்பவர்கள் நிச்சயமாக இறைவனின் தண்டனைக்கு உட்படுவார்கள். கட்சிகளைத் தாண்டி முஸ்லிம் கட்சியின் ஒரு தலைமை வேண்டுமன்றே குற்றவாளியாக சித்தரிக்கப்படுவதற்கு மக்களாகிய நாம் எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும். அதிகமாக துஆக்களை செய்து கொள்வோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

  • ஊடக பிரிவு –

Web Design by Srilanka Muslims Web Team