அநீதிக்கு எதிராக எத்தருணத்திலும் குரல் கொடுப்பேன்- பாலித தேவப்பெரும MP - Sri Lanka Muslim

அநீதிக்கு எதிராக எத்தருணத்திலும் குரல் கொடுப்பேன்- பாலித தேவப்பெரும MP

Contributors

 

 

நான் இங்கு வந்துள்ளமை எனது சமுகக் கடமையின் காரணமாகவே இன, மத வேறுபாடின்றி மக்கள் வாழ வேண்டும் ஆனால் ஒரு சிலரால் இன்னனொரு சமுகம் மீது மேற் கொள்ளப்படும் அடாவடித் தனங்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அடி மட்டப் பிரச்சினைகளை பார்த்துக் கொண்டிருந்தால் பிரச்சினைகள் அதிகரிக்கவே செய்யும் என களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும தெரிவித்தார்.

 

இந்த நாட்டில் நீதி, அநீதி என்பன விளங்காமல் செயற்படுபவர்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது நான் அநீதிக்கு எதிராக எத்தருணத்திலும் குரல் கொடுப்பேன்.

 

ஜாதி, மத பேதத்தில் பிரிந்திருந்தால் நாட்டிற்கு நல்லதல்ல. இன,மத பேதத்திற்கு அப்பால் நாம் செயற்பட வேண்டும், அன்று சுதந்திரம் கிடைத்தபோது ஆசியா, பிலிப்பைன்ஸ் என்பன முன்னணியில் இருந்தன கொரியா மிகவும் பின்னடையவில் இருந்தது இன்று அந்த நாடுகள் ஜாம்பவான்கள் என போற்றும் அளவிற்கு முன்னேறியுள்ளன.

 

தேசிய ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதில் சிந்திக்க வேண்டும், அளுத்கம மற்றும் தர்ஹா நகர் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் சிங்களவர்கள் அனைவரும் சம்பந்தப்படவில்லை இந்த நாட்டின் தீவிரவாத குழுவான இனவாத பொதுபல சேனாவின் காடையர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை இந்த நாட்டில் 99 வீதமான பௌத்தர்கள் எதிர்க்கின்றனர் என நான் அமெரிக்க தூதுவரை சந்தித்தபோது எடுத்துக் கூறினேன்.

 

அமெரிக்க தூதுவர் தமது நாட்டில் தீவிரவாத செயற்பாடுகள் இடம் பெற்றால் சட்டம், நீதி என்பன செயற்படுவதாக குறிப்பிட்டபோது நான் இலங்கையில் அவை தூங்குகின்றன என்றேன். உண்மையில் அளுத்கம சம்பவத்தில் 6 சிங்கள வீடுகளே பாதிக்கப்பட்டிருந்தன அத்துடன் ஒரு தமிழ் சகோதரர் கொலை செய்யப்பட்டிருந்தார் அதிகமான இழப்புக்கள் முஸ்லிம்கள் மீதே மேற் கொள்ளப்பட்டுள்ளது.

 

ஊடகங்களுக்கு மிகப் பெரும் பொறுப்புள்ளது. நடந்த சம்பவங்களை பாகுபாடின்றி வெளியிட வேண்டும், இனவாதம் செயற்படாத வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டும்.

 

அளுத்கம சம்பவம் இடம்பெற்ற இடங்களில் உள்ள பிள்ளைகளின் மன நிலைகள் பாதிப்படைந்தள்ளன. அவர்கள் காடையர்கள் அட்டூழியம் புரிந்த இடங்களில் இதுதான் தர்மமா? இதுதான் பௌத்தமா? என எழுதி வைத்துள்ளதை நான் கண்டேன். இன்று இந்த நாட்டில் உள்ள பிரதான பிரச்சினை சிறு பிள்ளைகளின் மனதில் உள்ள மேற்படி நிலைமைகளை மாற்ற வேண்டும்.

 

அந்தக்காலத்தில் இருந்த நிலை இன்றில்லை அன்று ஒரு பெண் தெவி நுவரவில் இருந்து தனியாக வரமுடிந்தது ஆனால் இன்று முச்சக்கர வண்டியில் கூட ஒரு பெண் தனியாக வரமுடியாத நிலையேயுள்ளது. நாங்கள் இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

 

அநீதிக்கு இடமளிக்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு எதிராக சிலர் செயற்படுகின்றனர் அவர்களும் இந்த நாட்டு குடி மக்கள்தான் என்ற என்னம் வேண்டும். களுத்துறை இந்துக் கோயிலில் அன்மையில் இடம் பெற்ற ஒரு பூஜை வழிபாட்டை தடை செய்ய பொலிஸார் குவிக்கப்பட்டனர் நான் அங்கு சென்று பொலிஸ் பொறுப்பததிகாரியிடம் கோயில் பூஜை வழிபாடு கோயிலுக்குள் இடம் பெறும்போது ஏன் அதிகளவான பொலிஸாரை குவித்துள்ளீர்கள் என்று வினவியபோது பொதுபல சேனா அதனை நடத்த வேண்டாம் என்றும் இங்கு உயிர்ப்பலி நடைபெறுகின்றது என்றும் கூறியதாக பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.

 

அதற்கு நான் ஒவ்வொரு சமயங்களுக்கும் அவர்களின் சமயக் கடமைகளை கடைப்பிடிக்க இந்த நாட்டின் அரசியல் சட்டத்திலேயே இடமிருக்கின்றது. அத்துடன் அவர்கள் அவர்களது கோயிலுக்குள் செய்யும்போது தடை செய்ய முடியாது நானும் உயிர்ப்பலியை வெறுப்பவன்தான் என்றாலும் என்னால் உங்களின் செயற்பாடுகளை ஏற்க முடியாது நீங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் காடையக்ளையல்லவா? நீங்கள் துரத்த வேண்டும் குழப்பங்காரர்களை அனுப்புங்கள் எனக் கூறிவிட்டு கோயிலுக்குள் சென்று நானே எனது கையால் முதல் உயிர்ப்பலியைச் செய்தேன் என்றார்.

 

மேற்படிச் செயலின் பின்னர் ஒரு வயோதிபப் பெண் என்னை வணங்கி எமது காலியம்மன் வந்ததுபோல் இருந்தது என என்னை வணங்கிச் சென்றார்.

 

இதேபோல் அதிவேகப் பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து நான் வைத்திய சாலைக்கு 4 நிமிடத்தில் எடுத்துச் சென்றேன் எனினும் அவரின் அதிக இரத்தப்போக்குக் காரமாண இறந்து விட்டார். இரத்தம் தேவைப்பட்டால் தமிழ், முஸ்லிம், பௌத்தம் என்றா பார்க்கின்றார்கள் இல்லையே எல்லோரும் இந்த நாட்டு மக்கள்தானே.

 

1945ஆம் ஆண்டு டொமினியன் அந்தஸ்து இருந்தபோது உள்நாட்டில் பாதுகாப்புத் தேவைப்பட்டது ஆனால் ரி.பி.ஜாயா போன்றவர்கள் பாதுகாப்பை பிறகு பார்க்கலாம் முதலில் சுதந்திரம்தான் தேவை என வாதாடினர் இவ்வாறே அன்றிருந்த முஸ்லிம் தலைவர்கள் நாட்டுக்காக பாடுபட்டனர்.

 

ரி.பி.ஜாயா, சேர் ராசீக் பரீட் போன்ற முஸ்லிம் அறிஞர்கள்தான் இன்று தேவை கடந்தகால யுத்தத்தின்போது தமிழ் மக்களைப் போன்று முஸ்லிம் மக்களும் தமக்கும் தனிநாடு தேவை என்று போரடியிருந்தால் இன்று நாடு பிரிந்திருக்கும் ஆனால் அவர்கள் அவ்வாறு கோரவில்லை மாறாக நடந்த யுத்தத்தின்போது சுமார் 96க்கும் மேற்பட்ட முஸ்லிம் படை வீரர்கள் தமது உயிரை பலி கொடுத்து நாட்டிற்கு சேவை செய்துள்ளனர் ஆனால் இன்று அவர்களை ஒடுக்கும் நிலையே இந்த நாட்டில் காணப்படுகின்றது.

 

பௌத்த மக்கள் இன்று முஸ்லிம்களை மரகல மினுசு எனக் கூறுகின்றனர் அதன் அர்த்தம் தெரியாமல் கதைக்கின்றனர். நான் பௌத் பிக்கு ஒருவரிடம் மரகல என்றால் என்ன என்று கேட்டபோது அவருக்கே அது தெரியாது. மரகல என்பது இந்த நாட்டு மன்னர்களை பாதுகாத்தவர்களாகும்.

 

எனவே என்னைப் பொருத்த மட்டில் நான் எந்தவித எதிர்பார்ப்பிற்காகவும் செயற்படுபவன் அல்ல மாறாக அநீதிக்கும் இனவாதத்திற்கும் எதிராக குரல் கொடுப்பவன் என்றார்.

 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும அளுத்கம உள்ளிட்ட பகுதிகளில் பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கு எதிரா மேற்கொள்ளப்பட்ட இனவாத்திற்கு எதிராக   குரல் கொடுத்ததுக்கா நன்றி தெரிவித்து மீடியா போரத்தால் விஷேடமாக கௌரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

 

 

Web Design by Srilanka Muslims Web Team