அனாகரிக தர்மபால பிறந்த தினத்தை தேசிய தினமாக்குமாறு ஜனாதிபதியிடம் மகஜர் - சிங்கள ஊடகம் - Sri Lanka Muslim

அனாகரிக தர்மபால பிறந்த தினத்தை தேசிய தினமாக்குமாறு ஜனாதிபதியிடம் மகஜர் – சிங்கள ஊடகம்

Contributors

-DC-

பௌத்த மத சீர்திருத்த வாதியான அனாகரிக தர்மபாலவின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு மகாசங்கத்தினர் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
அனாகரிக தர்மபால பிறந்து 150 வருடங்கள் நிறைவு பெறும் தினமான செப்டம்பர் 17 ஆம் திகதியை பௌத்த அமைப்புக்கள் தேசிய ரீதியில் கொண்டாடவுள்ளது. இதற்காக, இவ்வருடத்தை அனாகரிக்க தர்மபால நினைவு வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

 
பௌத்த புனிதஸ்தலங்களைப் பாதுகாப்பதற்காக உயிரை பொருட்படுத்தாமல் போராடிய ஒரு மாவீரராக ஸ்ரீமத் தர்மபால காணப்படுகின்றார். இதற்காக வேண்டி இவரது பிறந்த தினமான செப்டம்பர் 17 ஐ தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற வேண்டும் எனவும், தற்போதுள்ள சுதந்திர சதுக்கத்துக்கு அனாகரிக்க தர்மபால சுதந்திர சதுக்கம் என பெயர் மாற்றம் செய்யுமாறும், இவரது பெயரில் நினைவு முத்திரை ஒன்றை வெளியிடுமாறும் மாகசங்கத்தினர் இக்கடிதத்தில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சிங்கள செய்தி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team