அனுமதியின்றி மசூதிக்கு வெளியே புகைப்படம் எடுத்த பொப் பாடகி அபுதாபியை விட்டு வெளியேற்றப்பட்டார்! - Sri Lanka Muslim

அனுமதியின்றி மசூதிக்கு வெளியே புகைப்படம் எடுத்த பொப் பாடகி அபுதாபியை விட்டு வெளியேற்றப்பட்டார்!

Contributors

அபுதாபியில், மசூதிக்கு வெளியே, போட்டோ எடுத்த, பிரபல பொப் பாடகி ரிஹானா நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, பிரபல பொப் இசை பாடகி ரிஹானா அபுதாபி சென்றிருந்தார்.

அங்குள்ள, ஷேக் -ஜாயத் – ஷாகியின் மசூதிக்கு வெளியில், முன் அனுமதியின்றி, ரிகானா போட்டோ எடுத்தார். அவர் கறுப்பு உடை அணிந்து, எளிமையான அலங்காரம் செய்திருந்தாலும், சிவப்பு நிற உதட்டுச் சாயம் பூசி, தங்க நகைகள் அணிந்திருந்தார்.

அவருடைய செயல்பாடுகள் சரியில்லாததாலும், மசூதியின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் பொருட்டும், முன் அனுமதி பெறாமல் போட்டோ எடுத்ததாலும், அபுதாபியை விட்டு வெளியேறும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

24r1

 

24r3

 

24r4

 

24rr2

Web Design by Srilanka Muslims Web Team