அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றது அப்பட்டமான இனவாத அராஜகம்-கஜேந்திரகுமார்..! - Sri Lanka Muslim

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றது அப்பட்டமான இனவாத அராஜகம்-கஜேந்திரகுமார்..!

Contributors

அநுராதபுரசிறைசாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட அராஜகம் ஒரு அப்பட்டமான ஒரு இனவாதம் ஆகும்என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதற்கு எதிராக தற்போது எழுந்துநிற்காவிட்டால் இனவாதம் கட்டுப்படுத்த முடியாதபடி எல்லை மீறி போய்விடும் என எச்சரித்துள்ளார்
செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

“ அநுராதபுரசிறைசாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த அராஜகம் ஒரு அப்பட்டமான ஒரு இனவாதம் ஆகும்.
இந்த இனவாத அடக்குமுறை தமிழருக்கு எதிரானதாக தொடங்கி பின்னர் முஸ்லிம்களுக்கும் எதிரானதாக இப்போது உருமாறி இறுதியில் தமக்கு எதிரான தன் சொந்த சிங்கள் மக்களுக்கு எதிரானதாக உருமாறும்.
இது ஒரு புற்று நோய் போன்றது.
இதை அழிக்காவிடின் இது பரவிக்கொண்டே போகும்.
அது தான் இன்று இந்த நாட்டில் நடக்கிறது.


நேர்மையாக சிந்திக்க கூடிய அனைத்து இன மக்களும் இதை உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்கு எதிராக இப்போது எழுந்து நிற்காவிடின் இனி எப்ப்போதும் அடக்கமுடியாத அளவுக்கு இனவாதம் எல்லை மீறி போய்விடும்”

Web Design by Srilanka Muslims Web Team