அனைத்து அரச நிறுவனங்களிலும் இலஞ்ச, ஊழல் விசாரணைப் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை » Sri Lanka Muslim

அனைத்து அரச நிறுவனங்களிலும் இலஞ்ச, ஊழல் விசாரணைப் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை

bribe

Contributors
author image

Editorial Team

அனைத்து அரச நிறுவனங்களிலும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழலை கண்டறிவதே இதன் பிரதான நோக்கமென ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங், மலேஷியா மற்றும் பூட்டான் ஆகிய ஆசிய நாடுகள், இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கு முன்னெடுத்துள்ள நடைமுறைகளை அடிப்படையாக கொண்டு இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அரச நிறுவனங்களின் அதிகாரிகளுடன், ஊழல் ஒழிப்பு பிரிவினரின் அதிகாரிகளையும் இணைத்து ஊழலை கண்டறியும் விசேட பிரிவை ஸ்தாப்பிப்பற்கு தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி சரத் ஜயமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Web Design by The Design Lanka