அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட தீர்மானம்..! - Sri Lanka Muslim

அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட தீர்மானம்..!

Contributors

சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கும் அனைத்து பங்களாக்களையும் மூட வன பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய கொவிட் -19 தொற்று நோயின் அவதான நிலையை கருத்திற் கொண்டு மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிகள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படாது என வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.

வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான அனைத்து சுற்றுலா முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை கடந்த 5 ஆம் திகதி முதல் மூட நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team