அனைத்து முஸ்லிம்களுக்கும் அளிக்கப்பட்ட எச்சரிக்கை - நினைவிருக்கட்டும். » Sri Lanka Muslim

அனைத்து முஸ்லிம்களுக்கும் அளிக்கப்பட்ட எச்சரிக்கை – நினைவிருக்கட்டும்.

aasifa

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Marx Anthonisamy


ஆசிஃபா மீதான வன்முறையையும் படுகொலையையும் மத வன்முறையாக முன்வைக்காதீர் எனவும் இது நிர்பயா மீதான வன்முறை போன்ற ஒரு வன்முறைதான் எனவும் சில ‘இந்துத்துவா நடுநிலையாளர்கள்’ எழுதுகின்றனர்.

பச்சை அயோக்கியத்தனம்..

இது ஒரு இந்துப் பெரும்பான்மை கிராமத்தில் அங்குள்ள முஸ்லிம் நாடோடிச் சிறுபான்மைக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் எனும் நோக்குடன் காவல்துறை துணையுடன் மேற்கொள்ளப்பட்ட கொடூரம் ….

குற்றவாளிகளைக் கைது செய்யக்கூடாது என BJP ஊர்வலம் நடத்தியுள்ளது. இரண்டு BJP சட்டமன்ற் உறுப்பினர்கள் அதில் கலந்து கொண்டுள்ளார்கள்.

என்ன சொல்கிறீர்கள்? – இதுவும் நிர்பயா மீதான கொடூரமும் ஒன்றா?

ஆசிஃபா மட்டுமா அன்று வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டாள்… இந்திய ஜனநாயகம், அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட அரசியல் சட்டம் எல்லாமும் அல்லவா அன்று வன்புணர்ச்சி செய்து அழிக்கப்பட்டுள்ளது.

இது பகர்வால் பழங்குடியினருக்கு மட்டும் அளிக்கப்பட்ட எச்சரிக்கையா?

அனைத்து முஸ்லிம்களுக்கும் அளிக்கப்பட்ட எச்சரிக்கை – நினைவிருக்கட்டும்.

Web Design by The Design Lanka