அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் -அமைச்சர் றிசாத் பதீயுதீன் - Sri Lanka Muslim

அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் -அமைச்சர் றிசாத் பதீயுதீன்

Contributors

இந்த பாடசாலைகளின் தேவைகள் குறித்து எனது கவனம் செலுத்தப்படும் என தெரிவித்த கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதீயுதீன் இப்பிரதேசத்தில் வாழும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படும் அவசியத்தை வலியுறுத்தினார்.

 

 

வவுனியா மாவட்டத்தில் மாங்குளத்தில் அமைந்துள்ள அல்-ஹாமிய்யா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

 

பாடசாலை அதிபர் எம்,கே.அனீஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலக,வடமாகாண ஆளுநரின் ஆணையாளர் ஷாஹிப் மொஹதீன்,வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் என்ரன் சோமராஜா,அமைச்சரின் இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத்,வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

 

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில் கூறியதாவது

 

இந்த பாடசாலையானது மன்னார் –மதவாச்சி பிரதான பாதையில் அமைந்திருப்பதால் வவுனியா மாவட்டத்தில் மத்திய பிரதேசமாக காட்சி தருகின்றது.இந்த பாடசாலைக்கான பல்வேறு தேவைகள் தொடர்பில் அதிபர் அவர்கள் எடுத்துக் கூறினார்.இது தொடர்பில் எனது கவனத்தை செலுத்தியுள்ளேன்.

 

 

மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தயாராக இப்பாடசாலை அதிபர் இருக்கின்ற போது அதனை பயன்படுத்தி ஏனைய ஆசிரியர்களும்,பெற்றோர்களும் தமது பங்களிப்பினை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொட்டுக் கொண்டார்.

ma1 ma2 ma3 ma4 ma5 ma6

Web Design by Srilanka Muslims Web Team